என்னது...ஷாருக்கானுக்கு தெரிந்து தான் ஆர்யான் எல்லாமே செய்தாரா?...வைரலாகும் வீடியோ

மும்பை : பாலிவுட் சூப்பர் ஹீரோவான ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போதை பொருள் விவகாரத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஆர்யான் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அவருக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

சொகுசு கப்பலில் போதை பார்ட்டி

சொகுசு கப்பலில் போதை பார்ட்டி

அக்டோபர் 2 ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற Cordellia என்ற சொகுசு கப்பலில் பார்ட்டி நடந்துள்ளது. இதில் பிரபலங்கள், திரையுலக பிரபலங்களின் பிள்ளைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமே லட்சங்களில் செலுத்த வேண்டுமாம். இந்த பாj்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆர்யான்

கைது செய்யப்பட்ட ஆர்யான்

அப்போது கப்பலில் சோதனை செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஆர்யான் உள்ளிட்டோரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்த பார்ட்டியின் போது டெல்லியில் இருந்து வந்த தொழிலதிபர்களின் மகள்களான இளம் பெண்கள் சிலரும் ஆர்யானுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் யார், ஆர்யானுடன் இவர்களுக்கு எப்படி பழக்கம் என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan
மும்பை திரும்பிய ஷாருக்கான்

மும்பை திரும்பிய ஷாருக்கான்

இதற்கிடையில் மும்பையில் அட்லீ இயக்கும் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் முடிவடைந்ததை அடுத்து, ஏற்கனவே நடித்து வரும் பதான் படத்தில் நடிப்பதற்காக ஷாருக்கான் 3 வார பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். ஆனால் போதை பொருள் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டுள்ளதால், ஸ்பெயின் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, அவசரமாக மும்பை திரும்பி உள்ளார் ஷாருக்கான்.

மகனை சந்தித்த ஷாருக்கான்

மகனை சந்தித்த ஷாருக்கான்

வந்த கையோடு மகனை பார்க்க சென்ற ஷாருக்கான், போலீசாரிடம் அனுமதி பெற்று இரண்டு நிமிடங்கள் மகனிடம் பேசி உள்ளார். இதற்கிடையில் நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் வீட்டிற்கே நேரில் சென்று பார்த்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷாருக்கானை போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த பரபரப்பான சூழலில் அதிர்ச்சி தரும் வகையில் ஷாருக்கான் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கான் பேசிய இந்த பேட்டி வீடியோ, தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஷாருக் அனுமதி கொடுத்தாரா

ஷாருக் அனுமதி கொடுத்தாரா

அந்த வீடியோவில் ஷாருக்கான், என் மகன் ஆர்யான் மூன்று வயதாக இருக்கும் போதே பெண்களுடன் பழகவும், ஊர் சுற்றுவது, செக்ஸ் வைத்துக் கொள்வது, போதைப் பொருள் பயன்படுத்துவது போன்றவற்றிற்கு நான் அனுமதி கொடுத்து விட்டேன் என பேசி உள்ளார். இது உண்மை தான் என ஷாருக்கானின் மனைவி கவுரி கானும் ஒப்புக் கொண்டுள்ளார். மிக சர்வ சாதாரணமாக ஷாருக்கான் அன்று சொன்ன விஷயம் இன்று நிஜமாகி உள்ளது.

மனைவியும் சிக்கியுள்ளாரா

மனைவியும் சிக்கியுள்ளாரா

ஷாருக்கான் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போதை பொருள் விவகாரத்தில் சிக்கிக் கொள்வது இது முதல் முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கானின் மனைவி கவுரி கான், போதைப் பொருள் வைத்திருந்ததாக பெர்லின் விமான நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டார். ஆனால் அந்த குற்றச்சாட்டை கவுரி கான் அப்போது மறுத்தார். தான் போதைக்கு அடிமையானதாக கூறப்படுவதும் பொய் என கூறி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X