அச்சச்சோ...என்ன சொல்றீங்க...நடிப்பிற்கு எண்ட்கார்டு போட போகிறாரா உதயநிதி ஸ்டாலின் ?

சென்னை : நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல திறமைகளைக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ.,வாக உள்ளார்.

Recommended Video

Udhayanidhi-க்கு 4 Project இருக்கு..அதன்பின் மொத்தமாக 'டாட்டா' காட்ட முடிவா? | Oneindia Tamil

நடிப்பு, அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார் உதயநிதி. இரண்டு துறையிலும் ஆக்டிவாக இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி நடிக்க உள்ளார்.

நடிப்பை கைவிடுகிறாரா உதயநிதி

நடிப்பை கைவிடுகிறாரா உதயநிதி

ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி நடிகர், எம்எல்ஏ என இரண்டு வேலைகளையும் கவனிப்பதை கடினமாக உணர்கிறாராம் உதயநிதி. இதனால் நடிப்பை கைவிட முடிவு செய்திருக்கிறாராம். இது உண்மையாக இருக்குமானால் டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க போகும் படம் தான் அவரது கடைசி படமாக இருக்குமாம்.

தயாராகும் ஆர்ட்டிகிள் 15

தயாராகும் ஆர்ட்டிகிள் 15

உதயநிதி தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கும் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் ஷுட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

இன்னொரு படமும் ரெடியா

இன்னொரு படமும் ரெடியா

அத்துடன் மகிழ் திருமேனி இயக்கும் படத்திலும் நடிக்க உதயநிதி ஒப்பந்தமாகி உள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம்.

இருவருமே பிஸி

இருவருமே பிஸி

மாரி செல்வராஜும் தற்போது துருவ் விக்ரமை வைத்து விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இதனால் இருவருமே பிஸியாக உள்ளனர். துருவ் விக்ரம், சியான் 60 படத்தில் நடித்து வருகிறார். சியான் 60 படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிய போகிறதாம்.

முழுநேர அரசியல்வாதியாகிறாரா

முழுநேர அரசியல்வாதியாகிறாரா

இந்த படத்தின் வேலைகளை முடித்த பிறகு, மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க உள்ள படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற போகிறாராம் உதயநிதி.

3 படங்கள் தான் நடிப்பாரா

3 படங்கள் தான் நடிப்பாரா

கர்ணன், பரியேறும் பெருமாள் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ், விரைவில் உதயநிதி உடனான படத்தின் வேலைகளை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உதயநிதியிடம் கைவசம் 3 படங்கள் உள்ளது. இவற்றை முடித்து கொடுத்த பிறகு உதயநிதி நடிப்பில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X