பிக்பாஸ் வீட்டிற்குள் இதெல்லாம் நடக்குதா... இதுவரை தெரியாமல் போச்சே

சென்னை : விஜய் டிவி.,யில் பரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நான்கு சீசன்களை நிறைவு செய்து, தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ரம்யா கிருஷ்ணனே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல் குணமடைந்து திரும்பி வரும் வரை ரம்யா கிருஷ்ணனே தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீப் சவுண்ட் போடப்பட்ட சீசன்

பீப் சவுண்ட் போடப்பட்ட சீசன்

முந்தைய சீசன்களை போல் இல்லாமல் பிக்பாஸ் சீசன் 5 ல் அதிகபட்சமாக 18 பேர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக சேர்க்கப்பட்டதும் இந்த சீசன் 5 ல் தான். அதே போல் போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை பேசி, அதற்காக பீப் சவுண்ட் போடப்பட்டதும் இந்த சீசனில் தான்.

தொடரும் எவிக்ஷன்

தொடரும் எவிக்ஷன்

50 நாட்களை கடந்த பிறகும் அதிகமான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதும் இதுவே முதல் முறையாகும். இதனால் அடுத்தடுத்து வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கமல் இல்லாததால் கடந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என கூறப்பட்டது. ஆனால் எவிக்ஷன் உண்டு என ரம்யா கிருஷ்ணன் ப்ரோமோவிலேயே கூறி, ஐக்கி பெர்ரியை வெளியேற்றினர்.

யாரும் தூங்கக் கூடாது

யாரும் தூங்கக் கூடாது

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வேக் அப் சாங் போடப்பட்டதும் எழுந்து விட வேண்டும். அதற்கு பிறகு, இரவு லைட்ஸ் ஆஃப் செய்யப்படும் வரை யாரும் தூங்கக் கூடாது. அடுத்தடுத்து கொடுக்கப்படும் டாஸ்க்குகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும். அதையும் மீறி யாராவது தூங்கினால், நாய் குரைக்கும் சத்தம் ஒலிக்கும். தொடர்ந்து தூங்கினால் வார்னிங் கொடுக்கப்பட்டு, பிறகு தண்டனை கொடுக்கப்படும்.

டான்ஸ் கற்று தரும் மாஸ்டர்

டான்ஸ் கற்று தரும் மாஸ்டர்

வேக் அப் சாங் ஒலிக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் எழுந்து, கார்டன் ரேியாவிற்கு வந்து நடனம் ஆட வேண்டும். ஆனால் இந்த சீசனில் வேக் அப் சாங்கிற்கு பலர் நடனமாடுவது இல்லை என பிக்பாசே குறை கூறினார். பலருக்கு நடனம் ஆட தெரியவில்லை என கூறி, டான்ஸ் மாஸ்டர் அமீர் அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

இது வேற நடக்குதா

இது வேற நடக்குதா


இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் வேக் அப் சாங் ஒரு முறை அல்ல. மூன்று முறை ஒலிக்க செய்யப்படுமாம். இது போட்டியாளர்களை எழுப்புவதற்காக மட்டுமில்லையாம். ஃபுட்டேஜிற்காக தான் மூன்று முறை வேக் அப் சாங் போடப்படுகிறதாம். மூன்று முறை பாடல் ஒலிக்கும் போதும் போட்டியாளர்கள் நடனம் ஆட வேண்டுமாம்.

கேள்வி கேட்கும் ரசிகர்கள்

கேள்வி கேட்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து விட்ட நிலையில், ஐந்தாவது சீசனில் தான் இந்த தகவல் வெளியே வந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், அப்படியானால் பிக்பாஸ் ஸ்கிரிப்டட் என்று சொல்லப்படுவது உண்மை தானா என ரசிகர்கள் கேட்டுள்ளனர். ஃபுட்டேஜிற்காக ஒரே செயலை போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்க வேண்டுமா என கேட்டு வருகின்றனர்.

ஸ்கிரிப்டட் தானே

ஸ்கிரிப்டட் தானே

ஃபுட்டேஜிற்காக செயல்படுவது எல்லாம் எப்படி யதார்த்தமாக நடப்பதாக இருக்கும். எல்லாமே அவர்கள் சொல்வதை போல் செய்யப்படுவது தானே. அப்படியானால் ஸ்கிரிப்ட் படி தான் எல்லாம் நடக்கிறது என சொல்வதை ஏன் அனைவரும் இல்லை என மறுக்கிறார்கள் என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X