Don't Miss!
- News
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது சூப்பர் மேட்டரா இருக்கே...ஏகே 63ல் தீனா பட கூட்டணி மீண்டும் இணைய போகிறதா?
சென்னை : விஜய், கமலின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த படத்தில் அவர்கள் முதலில் நடிக்க போகிறார்கள், யார் இயக்க போகிறார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினியை பொருத்த வரை, ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படம் பற்றி பேசுவது, வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது போன்றவற்றை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார். அஜித்தும் அதையே கடைபிடித்து வந்தார்.
ஆனால் வலிமை படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தாமதமானதால், தனது கொள்கைகளை சமீபத்தில் தளர்த்திக் கொண்டுள்ளார். இதனால் ஏகே 61 படத்தின் வேலைகள் துவங்கிய சில நாட்களிலேயே ஏகே 62 அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டனர்.
இசையுலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்..துயரம் நிறைந்து முடிந்த இறுதி நாட்கள்

விறுவிறுப்படையும் ஏகே 61 ஷுட்டிங்
அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் ஷுட்டிங் முழுவதையும் முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏகே 62 ஷுட்டிங் எப்போ
ஏகே 61 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் ஏகே 62 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது கிராமத்து சப்ஜக்ட் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அட ஏகே 63 அப்டேட்டும் வந்தாச்சா
இதற்கு பிறகு அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதில் மதுரை கேங்ஸ்டர் ரோலில் அஜித் நடிக்க போகிறார் என்ற தகவலும் சமீபத்தில் பரவியது. ஆனால் ஏகே 63 பற்றி இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் ஏகே 63 பற்றி புதிய மாஸான தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.

தீனா டீம் மறுபடியும் ஒன்று சேருதா
இதன்படி ஏகே 63 படத்தை, அஜித் நடித்த தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்க போவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் வந்தா நல்லாயிருக்கும்
தர்பார் படம் தோல்வி அடைந்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் எந்த படத்தை இயக்கவில்லை. தற்போது கோச்சடையான் பாணியில் அனிமேஷன் படம் ஒன்றை அவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவலின் படி, ஏ.ஆர்.முருகதாஸ் - அஜித் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானால் உண்மையிலேயே முருகதாசிற்கு அது நிச்சயம் மிகப் பெரிய கம்பேக்காக இருக்கும் என்றே கூறப்படுகிறது. மீண்டும் பழைய ஃபாமிற்கு திரும்பி இன்னும் பல நல்ல சோஷியல் மெசேஜ் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.