மீண்டும் தள்ளி போகிறதா விக்ரமின் கோப்ரா ரிலீஸ்...ஏன், என்ன காரணம்?

சென்னை : நடிகர் விக்ரமின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று கோப்ரா. சையின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2019 ம் ஆண்டே இந்த படம் பற்றிய அறிவிப்பு, டைட்டில் என அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டது. 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை பான் இந்தியா படமாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஷுட்டிங்

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஷுட்டிங்

2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தின் க்ளைமாக்சை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு, படக்குழு சென்றது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஷுட்டிங்கை நிறுத்தி விட்டு, படக்குழு இந்தியா திரும்பியது. 25 சதவீதம் ஷுட்டிங் மட்டுமே மீதமிருந்த நிலையில், படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் 2020 டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு துவங்கி, 2021 ம் ஆண்டு மத்தியில் தான் முடிக்கப்பட்டது.

25 கெட்அப்களில் விக்ரம்

25 கெட்அப்களில் விக்ரம்

இந்த படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 25 கெட்அப்களில் நடிப்பதாக சொல்லப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.ஒரு வழியாக படத்தை முடித்து ஃபர்ஸ்ட், செகண்ட் சிங்கிள்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இவைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

கோப்ரா ரிலீஸ் தள்ளி போகிறதா

கோப்ரா ரிலீஸ் தள்ளி போகிறதா

இந்நிலையில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின்படி, கோப்ரா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏன், என்ன காரணம்

ஏன், என்ன காரணம்

ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை தேதி மாற்றப்பட்டால் நிச்சயம் விக்ரமின் மற்றொரு அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான பொன்னியின் செல்வனுடன் மோதிக் கொள்ளும் அளவிற்கு தேதியை முடிவு செய்ய மாட்டார்களே என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொன்னியின் செல்வன் வேறு வருதே

பொன்னியின் செல்வன் வேறு வருதே

பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளதால் கோப்ரா படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X