»   »  முதல் 'ஸோம்பி' இங்கே இருக்கு.. 2வது ஸோம்பி எப்ப வரும்?!

முதல் 'ஸோம்பி' இங்கே இருக்கு.. 2வது ஸோம்பி எப்ப வரும்?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியின் மிருதன் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டது. வித்தியாசமான கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக சொல்லிய விதத்தால் மிருதன், ரசிகர்களைக் கவர்ந்து விட்டான். அடுத்து இதன் 2ம் பாகமும் வரும் என்றே தெரிகிறது.

உலகிலேயே முதல் முறையாக 1932-ம் ஆண்டு முதல் ஸோம்பி (Zombie) ரக திரைப்படம் விக்டர் மற்றும் ஹால்ப்ரின் ஆகியோரின் இயக்கத்தில் வந்தது. பெயர் ஒயிட் ஸோம்பி. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் ஸோம்பி கதையை மையமாக கொண்டு ஹாலிவுட்டில் வந்துள்ளது. அனைத்தும் பிரபலமாகவும் பேசப்படும் படங்களாகவே இருந்துள்ளது.


Is Jayam Ravi will Play In dual Role in 'Miruthan 2' ?

இந்த நிலையில் ஸோம்பியைத் தவிர வரலாறு, சரித்திரம், அதிரடி மற்றும் பேய் என திரும்பத் திரும்ப ஹிட் அடித்த நம் தமிழ் சினிமா முதல் முறையாக ஸோம்பி படமாக மிருதனை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.


இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை அளிப்பதோடு, இந்தியாவின் முதல் ஸோம்பி வகை திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் இறுதியில், கதாநாயகன் ஜெயம் ரவி ஸோம்பி வைரசால் தாக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும், காதலி லக்ஷ்மி மேனன் மற்றும் தங்கையையும் அந்த ஸோம்பி தாக்காத வகையிலும் பாதுகாக்கின்றார்.


ஆனால் அதில் அவர் ஸோம்பிகளால் தாக்கப்பட்டு அவரும் ஸோம்பியாக மாறி விடுகிறார். ஊட்டியில் ஸோம்பியாக மாறியவர், ஒரு பஸ்சின் மீது அமர்கிறார். அந்த பஸ் சென்னைக்கு புறப்பட
மிருதன் தொடரும் என்று படம் முடிகின்றது.


இதனால், "மிருதன் 2" -ன் கதை சென்னையில்தான் என்பது உறுதி. ஆனால், ஸோம்பியாக மாறிய ரவியை காப்பாற்ற வரப்போகும் மற்றொரு கதாநாயகன் யார் என்பதை தான் உறுதி செய்ய வேண்டும். சொல்ல முடியாது அதையும் ரவியே செய்து டபுள் ஆக்ட் செய்தாலும் செய்யலாம்!

English summary
Miruthan is the first zombie film in Tamil. This Movie was a new Attempt of Tamil Cinema. The World's first Zombie type of movie was "White Zombie" who was directed by victor Halperin. In Miruthan Movie's Climax end with To be Continued. So we All Expect "Miruthan part 2". And our Suspense question, Is Jayam ravi will play in Dual role?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil