»   »  காலாதான் கடைசியா... அல்லது இன்னும் படங்கள் பண்ணுவாரா?

காலாதான் கடைசியா... அல்லது இன்னும் படங்கள் பண்ணுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் இப்போது 2.ஓ மற்றும் காலா கரிகாலன் என இரு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதைவிட பிஸியாக அரசியல் ஆலோசனைகள், திட்டமிடல்கள் நடந்து வருகின்றன.

அவரது அரசியல் கட்சி அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகக் கூடும் என்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12க்குள் அரசியல் கட்சியை அறிவித்துவிடுவார் ரஜினி என்பதுதான் நிலைமை.

கடைசி படம்

கடைசி படம்

ரஜினிகாந்தின் கடைசி படம் காலாதான். அதற்குப் பிறகு அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என்று முன்பு கூறப்பட்டது. வழக்கம்போல எந்த மறுப்பும் இல்லை ரஜினி.

இன்னும் இரு படங்கள்

இன்னும் இரு படங்கள்

ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கக் கூடும் என்கிறார்கள். அதுகுறித்த பேச்சுவார்த்தையிலும் ரஜினி ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வெற்றி மாறன் சந்திப்பு

வெற்றி மாறன் சந்திப்பு

இதற்கிடையே ரஜினியை இயக்குநர் வெற்றிமாறன் சந்தித்தது பல்வேறு யூகச் செய்திகளுக்கு காரணமாகிவிட்டது. ரஜினியின் அடுத்த படத்தை வெற்றிமாறன்தான் இயக்கப் போகிறார் என அடித்துச் சொல்கிறார்கள் சிலர்.

ராஜமௌலி?

ராஜமௌலி?

ரஜினி - ராஜமௌலி காம்பினேஷனில் ஒரு படம் உருவாக வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் கனவு. அதேபோல முதல்வன் 2 கதையில் ரஜினி நடிக்க வேண்டும் என்பது இயக்குநர் ஷங்கரின் விருப்பம்.

அரசியலுக்கு வந்த பிறகும்...

அரசியலுக்கு வந்த பிறகும்...

எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதுபோல, தேர்தலுக்கு அவகாசமிருக்கும்பட்சத்தில் ரஜினியும் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

English summary
Sources say that Rajinikanth may sign two more films before he contest elections.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil