பொன்னியின் செல்வனில் கமலுக்கு என்ன ரோல்...மணிரத்னத்திற்காக தான் இதுவா?

சென்னை : இந்திய சினிமா உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் தான். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Recommended Video

Ponniyin Selvan படத்தில் வில்லன் யார்? *Entertainment

பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.

மோஷன் போஸ்டர், படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடித்த விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரின் போஸ்டர்கள், டீசர் ஆகியன அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

விக்ரமின் டப்பிங் மேக்கிங் வீடியோ

விக்ரமின் டப்பிங் மேக்கிங் வீடியோ

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ள வில்லை. அவரது எதிர்பார்த்து காத்திருந்து, ஏமாந்த ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக விக்ரம் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. 5 மொழிகளில் டப்பிங் பேசிய விக்ரமின் வீடியோ செம வைரலாகி வருகிறது.

கமலின் ரோல் என்ன

கமலின் ரோல் என்ன

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்தில் கமலும் இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக என்ன ரோலில் கமல் நடித்துள்ளார் என கேட்டு வந்தனர். ஆனால் படத்தில் கமல் நடிக்கவில்லையாம். வாய்ஸ் அப்பியரன்ஸ் மட்டும் செய்துள்ளாராம்.இதனால் யாருக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

கமல் என்ன தான் செய்திருக்கிறார்

கமல் என்ன தான் செய்திருக்கிறார்

ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கமல் யாருக்கும் குரல் கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் கதை பற்றி விளக்கும் காட்சிகளுக்கு தான் கமல் வாய்ஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் தான் கமல் டப்பிங் பேசி முடித்தார். பொன்னியின் செல்வன் படத்திற்காக கமல் டப்பிங் பேசிய போட்டோ ஒன்று தற்போது வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

இதற்காக தான் இதை செய்தாரா கமல்

இதற்காக தான் இதை செய்தாரா கமல்

டைரக்டர் மணிரத்னம் உடனான நட்பு, அவர் மீதான மரியாதை காரணமாக தான் இந்த படத்தில் கதை விளக்கத்திற்கு மட்டும் குரல் கொடுக்க கமல் ஓகே சொல்லி உள்ளார். மணிரத்னத்திற்கு இதுவரை கமல் ஒரு போதும் நோ சொன்னது கிடையாது. நாயகன் படத்தில் துவங்கிய இவர்களின் உறவு தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X