»   »  திருநாள் படத்தின் கதைதான் கிடாரியா? இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்?

திருநாள் படத்தின் கதைதான் கிடாரியா? இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீவா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருநாள். வில்லன் சரத் லோகியாலாவிடம் அடியாளாக இருப்பார் ஜீவா. ஒரு கட்டத்தில் சரத்தின் செயல்கள் பிடிக்காமல் போக அவருக்கு எதிராகவே களம் இறங்குவார். இறுதியில் சரத்தை போட்டு தள்ளுவதாக படம் முடியும்.

அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் கிடாரி படமும் இதே கதைதான் என்கிறார்கள். ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கும் அந்த சந்தேகம் ஏற்படுகிறது. வேல ராமமூர்த்தியிடம் வேலை பார்ப்பவராக சசிகுமார் வருகிறார். ஒரு கட்டத்தில் வேல ராமமூர்த்தியையே எதிர்க்கும் சூழ்நிலை வருகிறது.
இறுதியில் சசியின் அப்பாவாக நெப்போலியன் எண்ட்ரி ஆகிறார்.


Is Kidaari storyline is same as Thirunaal?

இந்த ஒன்லைன் காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படங்களில் வந்திருக்கிறது என்றாலும் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரே லைனில் வருவதால் எப்படி இந்த குழப்பம் வந்திருக்கும் என கிடாரி படக்குழு தலையை பிய்த்துக்கொள்கிறதாம்.


என்ன பெரிய குழப்பம்.. கதைப் பஞ்சத்துல அடிப்பட்டுப் போய் ஒரே கதையை மாத்தி மாத்தி எடுக்கிறது என்ன புதுசா?

English summary
Sources say that Kidaari story is the same as Thirunaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil