தமிழ் கத்துகிட்டு வா...இந்த டயலாக் இந்தி வெர்சன் 'ரா' ல் இருக்கா?
சென்னை : இந்தி மொழி பற்றி பீஸ்ட் படத்தில் விஜய் பேசிய வசனம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் டிரெண்ட் ஆகி உள்ளது. இதற்கு பாஜக.,வை சேர்ந்த சிலரே ஆதரவும் தெரிவித்துள்ளது தான் ஹைலைட்டே.
Recommended Video
சமீபத்தில் இசை திருவிழா பற்றிய அறிவிப்பை ஷேர் செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழணங்கு என்ற வார்த்தையுடன் தமிழன்னையின் போஸ்டரை பகிர்ந்திருந்தார். இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்க தான் ரஹ்மான் இவ்வாறு பேசினார் என்றார்கள்.

மொழி பிரச்சனையில் பிரபலங்கள்
இதற்கு ஏற்றாற் போல் ரஹ்மானும், தமிழ் தான் இணைப்பு மொழி என்றும், தமிழில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தும் பதிவிட்டிருந்தார். சன் டிவியில் அளித்த பேட்டியிலும் விஜய், தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி முடித்தார். இந்த சமயத்தில் சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள், தமிழால் இணைவோம் #TamilConnects என ட்வீட் போட்டது டிரெண்ட் ஆனது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக தான் இவர்கள் ட்வீட் போட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டது.

தமிழ் கத்துக்கிட்டு வா
இப்படி மொழி பிரச்சனை சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இன்று வெளியான பீஸ்ட் படத்தில் விஜய், சும்மா ஒவ்வொரு முறையும் உனக்கு translate பண்ணிட்டே இருக்க முடியாது. உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா என மாஸா ஒரு டயலாக் பேசி இருப்பார். இதற்கு பாஜக.,வை சேர்ந்த அண்ணாமலையும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியில் இந்த டயலாக் இருக்கா
விஜய்யின் இந்தி பற்றிய டயலாக் தியேட்டரில் விசில் பறக்க செய்துள்ளது. ஆனால் நெட்டிசன்கள் பலரின் சந்தேகம் என்னவென்றால், பீஸ்ட் படம் தமிழில் மட்டுமல்ல மொத்தம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியில் ரா என்ற பெயரில் பீஸ்ட் படம் ரிலீசாகி உள்ளது. இந்தி வெர்சனில் மொழி பற்றிய இந்த டயலாக் வைத்துள்ளார்களா, அதை எப்படி மாற்றி உள்ளார்கள் என ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

இது என்னப்பா புது பிரச்சனை
இதற்கு முன் ஜெய்பீம் படத்திலும் இதே போன்ற பிரச்சனை எழுந்தது. அந்த படத்தில் இந்தியில் பேசும் ஒருவரை அடித்து, தமிழில் பேசு என சொல்வார் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் அந்த வசனம் அப்படியே மாற்றப்பட்டிருக்கும். தற்போது இதே பிரச்சனை பீஸ்ட் படத்திற்கும் எழுந்துள்ளது. பீஸ்ட் படத்திற்கு ஏற்கனவே நெகடிவ் கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில் மொழி பிரச்சனையும் இதோடு இணைந்துள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய் பேசி உள்ள அரசியல் வசனங்களால் திமுக.,வினரும் கடுப்பாகி உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











