Don't Miss!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லோகேஷ் கனகராஜ் இயக்கியது விக்ரம் 2 ஆ...கமலே சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் 2 படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதற்குள் படத்தின் டிரைலர் மற்றும் டீசரை பார்த்து விட்டு அடுக்கடுக்காக பல சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்,
இதில் முக்கியமாக அதிகமானவர்களால் கேட்கப்படும் கேள்வி, தற்போது ரிலீசாக உள்ளது விக்ரம் இரண்டாம் பாகமா, 1986 ம் ஆண்டு கமல் நடித்த விக்ரம் படத்தின் தொடர்ச்சி தான் இந்த கதையா, இல்லை அதே கதையை ரீமேட் செய்திருக்கிறாரா லோகேஷ் கனகராஜ் என்பது தான். அதோடு 1986 ம் ஆண்டு ரிலீசான விக்ரம் படத்திற்கும், தற்போது எடுக்கப்பட்டுள்ள விக்ரம் படத்திற்கும் என்ன ஒற்றுமை உள்ளது என்றும் கேட்டு வருகிறார்கள்.
கமல் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலர் திரையிடப்பட்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் விக்ரம் படம் பற்றிய சந்தேகங்களை கேன்ஸ் விழாவில் பங்கேற்க வந்த கமலிடமே பத்திரிக்கையாளர்கள் கேட்டு விட்டனர்.
வயிற்றில்
இரத்த
கசிவு.,,
டி.ராஜேந்தருக்கு
வெளிநாட்டில்
சிகிச்சை...
சிம்பு
தகவல்
!

இது கமல் சொன்ன கதையா
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பது விக்ரம் 2 ஆ என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், பழைய விக்ரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்பவத்தை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. விக்ரம் படத்தின் கதை பற்றி நாங்கள் ஆலோசனை நடத்திய போது, யதார்த்தமாக பேச்சுவாக்குல ஒரு கதையை கூறினேன். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போய், அதையே டெவலப் செய்து, முழு கதையையும் உருவாக்கி விட்டார்.

லோகேஷின் படம் இது
கதையின் ஆரம்ப புள்ளி நானாக இருந்தாலும் அதை முழு கதையாக உருவாக்கி, அவருக்கே உரிய ஸ்டைலில் படமாக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சில சமயங்களில் சில நல்ல படங்கள் வெளிவருவதில்லை. ஆனால் தொழில்நுட்பத்திற்கு நன்றி. தகுந்த விடாமுயற்சியுடன் எடுக்கப்படும் எந்த படமும் வெளிவரும். அது தான் விக்ரம் படத்திற்கும் நடந்துள்ளது.

எனக்கு யாரும் போட்டியில்லை
என்னுடன் நடிக்கும் கலைஞர்களை நான் ஒரு போதும் போட்டியாக நினைத்தது கிடையாது. அவர்களின் திறமைகள் மட்டுமே எனக்கு போட்டி. அதே போல் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் நடிப்பு. போட்டி போடுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், நடிகரோ, நடிகையோ அது முக்கியமல்ல. ஆனால் இறுதியில் படம் வெற்றி பெற வேண்டும். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் கைதேர்ந்தவர்கள் . அதனால் அவர்களுக்கு போட்டியாக என்னுடைய நடிப்பில் தான் நான் கவனம் செலுத்தினேன்.
Recommended Video

விக்ரம் பார்ட் 2 கிடையாது
விக்ரம் படத்தில் சூர்யாவின் பங்கு முக்கியமானது. அழுத்தமான ஸ்பெஷல் ரோல். இறுதி வரை படத்தில் அவர் நடித்திருப்பார். அவருடைய ரோல் படத்தை அடுத்த பாகத்திற்கு அழைத்து செல்வதாக இருக்கும். நீங்கள் சொல்வதை போல் சொல்ல வேண்டுமானால் பார்ட் 3 ஆக இருக்கும். ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளது விக்ரம் பார்ட் 2 கிடையாது. இது முற்றிலும் மாறுபட்ட வேறு கதை என கமல் தெரிவித்துள்ளார்.