»   »  தமிழ் சினிமாக்களில்தான் "ஆவி" என்றால் நடிகர் சங்கத் தேர்தலிலுமா??

தமிழ் சினிமாக்களில்தான் "ஆவி" என்றால் நடிகர் சங்கத் தேர்தலிலுமா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாக்கள் இன்று நடிகர் நடிகையரை விட ஆவி, பேய்களைத்தான் அதிகம் நம்புகின்றன. இந்த நிலையில் நடிகர் விஷால் சமீபத்தில் பேசிய பேச்சை சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

நல்ல கதை, நல்ல நடிகர் நடிகையர், நல்ல கருத்து.. இதெல்லாம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இருந்தது என்றாகி விட்டது. இப்போதெல்லாம் கதை, நடிகர் நடிகையர் பற்றியெல்லாம் யாருக்குமே கவலை இல்லை. படம் ஓடுதா. ஓட வைக்கனும்னா என்ன செய்யனும் என்ற அளவுக்கு சுருங்கி போய் விட்டார்கள்.

படத்தை வெளியிட்ட வேகத்தில் கல்லா கட்டத் தேவையானவற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் கையில் கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் பேய், பிசாசு ஆவிகள்தான்.

பேய் சென்டிமென்ட்

பேய் சென்டிமென்ட்

தாய் சென்டிமென்ட்டை வைத்துப் படம் எடுத்த காலம் போய் இப்போது பேய் சென்டிமென்ட்டை வைத்து கலக்கி எடுக்கிறார்கள் கோலிவுட்டினர்.

டார்லிங் பேய்கள்

டார்லிங் பேய்கள்

டார்லிங் டார்லிங் ஐ லவ்யூ லவ்யூ என்ற இனிமையான பாடல்கள் இருந்த காலம் மலையேறிப் போய் விட்டது.. இப்போது டார்லிங் ரக பேய்கள்தான் ஆட்சி புரிகின்றன.

மாயா பேய்கள்

மாயா பேய்கள்

மாயா மச்சீந்திராக்கள் உலவி வந்த இடத்தில் இன்று மாயா பேய்கள் ராஜ்ஜியம் நடத்துகின்றன. நல்ல பேய்க்கதையுடன் வருவோருக்கு தயாரிப்பாளர்களிடையே செம மவுசு உள்ளதாம்.

தேர்தலிலும் ஆவி

தேர்தலிலும் ஆவி

இப்படி பேய்களும், பிசாசுகளும், ஆவிகளும் ஆட்சி புரியும் தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சங்கத் தேர்தலிலும் ஆவி புகுந்து விட்டதாக சிலர் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

விஷால் பேசிய பேச்சு

விஷால் பேசிய பேச்சு

விஷால் பேசிய பேச்சுதான் இதற்குக் காரணம். சமீபத்தில் நடந்த எஸ்எஸ்ஆர் உருவப்பட திறப்பு விழாவில் விஷால் பேசுகையில், தன்னை எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்எஸ்ஆர் ஆன்மாக்கள் வழி நடத்துவதாக பேசியதை வைத்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனராம்.

ஆன்மாக்கள் வழிநடத்தல்

ஆன்மாக்கள் வழிநடத்தல்

சினிமாவில்தான் ஆன்மா, ஆவி, பேய் என்றால் நடிகர் சங்கத் தேர்தலிலும் அதைக் கொண்டு வந்து விட்டார்களே என்று கலாய்த்து வருகிறார்களாம்.

English summary
Actor Vishal's speech on Nadigar sangam elections has created a flutter among his haters.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil