நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃபிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சென்னை : கோலிவுட்டின் ஃபேமஸ் காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் ரஜினி, சூர்யா, ஜோதிகா, ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் என அறிவித்தது முதல் தற்போது வரை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வெளியிடும் ஒவ்வொரு போட்டோ உள்ளிட்ட பதிவுகளும் டிரெண்டாகி வருகின்றன.

மொத்த செலவையும் செய்த நெட்ஃபிளிக்ஸ்

மொத்த செலவையும் செய்த நெட்ஃபிளிக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றிருந்தது. இதற்காக 25 கோடி வரை நெட்ஃபிளிக்ஸ் கொடுத்ததாக சொல்லப்பட்டது. திருமணத்தின் மொத்த செலவையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் அளித்ததாக சொல்லப்பட்டது.

சாப்பாட்டு செலவு இவ்வளவா

சாப்பாட்டு செலவு இவ்வளவா

விருந்தினர்களுக்கான ரூம் வாடகை, அலங்காரம், மேக்அப், செக்யுரிட்டி, திருமண விருந்து என அனைத்திற்கும் நெட்ஃபிளிக்ஸ் தான் பணம் செலவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு இலைக்கு 3500 வரை செலவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

திருமணம் போட்டோ வெளியிட்ட விக்கி

திருமணம் போட்டோ வெளியிட்ட விக்கி

திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியதால் தான் மீடியாக்கள் யாருக்கும் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை. விருந்தினர்களும் மொபைல் போன் கொண்டு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் திருமணம் முடிந்ததும் பிற்பகலிலேயே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் திருமணம் நடந்த சில போட்டோக்களை மட்டும் வெளியிட்டார்.

 விஐபி.,க்கள் போட்டோவையும் வெளியிட்டுட்டாரே

விஐபி.,க்கள் போட்டோவையும் வெளியிட்டுட்டாரே

இதைத் தொடர்ந்து ஹனிமூன் சென்ற போட்டோக்களை வெளியிட்டவர், சமீபத்தில் திருமணம் ஆகி ஒரு மாதம் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்காக திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வந்து, வாழ்த்திய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இதனால் இவர்களின் திருமணம் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடம் இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியதா

நெட்ஃபிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியதா

விக்னேஷ் சிவன் விஐபி.,க்கள் போட்டோ உள்ளிட்ட பல திருமண போட்டோக்களை வெளியிட்டதால் கடுப்பான நெட்ஃபிளிக்ஸ், திருமணத்திற்காக தாங்கள் செலவிட்ட தொகை, ஒளிபரப்பு உரிமத்திற்கு வழங்கிய தொகை உள்ளிட்ட அனைத்தையும் திருப்பி தரும் படி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரவியது. இதனால் மீடியாக்கள் பரபரப்பாகி ஆகின.

உண்மையில் நடந்தது என்ன

உண்மையில் நடந்தது என்ன

ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் போட்டோ வெளியிட்டதால் கொடுத்த பணத்தை நெட்டிஃபிளிக்ஸ் நிறுவனம் திருப்பிக் கேட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை.அப்படி எந்த நோட்டீசையும் தாங்கள் அனுப்பவில்லை என நெட்டிஃபிளிக்ஸ் நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.

விரைவில் வீடியோ வெளியீடு

விரைவில் வீடியோ வெளியீடு

அது மட்டுமல்ல விரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண டாக்குமென்ட்ரி மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை டாக்குமென்ட்ரி ஆகியவற்றை வெளியிட உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. எப்போது வெளியாகும் என்ற தேதி விரைவில் வெளியிடப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X