இயக்குநர் பாக்யராஜிடம் ஜி.எம்.குமார் (அறுவடைநாள் படத்தின் இயக்குநர்) உதவியாளராக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது. கதை விவாதம் நடக்கும் போது உதவி இயக்குநர்களிடம் சமீபத்தில் வெளியான படங்கள் பற்றிக் கேட்பாராம் ஜி.எம்.குமார். "படம் பார்க்கல சார்" என்று யாரவது சொன்னால் கோபமாகி திட்ட ஆரம்பித்துவிடுவாராம்.

"படம் நல்லா இருக்கோ இல்லையோ படத்தைப் பாத்திரனும். நாம ஒரு கதை பேசிக்கிட்டிருக்கும் போது வெளிவந்த படத்திலுள்ள காட்சி நம்ம கதையில் வராமப் பார்துக்கணும்னா அந்தப் படம் பார்த்தால்தானே முடியும்! போய் படம் பார்த்திட்டு வா," என்று காசு கொடுத்து உதவி இயக்குனர்களைப் படம் பார்க்க அனுப்புவாராம் ஜி.எம்.குமார்.
ஒரு காட்சிக்கே கவனமாகப் பார்த்த காலம் அது. இப்போ ஒரு முழு படமே சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் சாயலில் வரவிருக்கிறது. படத்திற்கு பெயர் - 'சீசர்' ஆக்சன் கிங் அர்ஜுனின் அக்கா மகன் 'சிரஞ்சீவி சர்ஜா' இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தவிர, பிரகாஷ்ராஜ், கன்னட நடிகர் ரவிச்சந்திரன் என முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் வினய் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

படத்தின் கதை?
கடன் வாங்கி கார் வாங்கி விட்டு கடனைக் கட்ட முடியாமல் ஏமாற்றும் நபர்களின் கார்களை அவர்களுக்குத் தெரியாமலேயே கைப்பற்றித் தூக்கும் கார் சீசர் ஒருவன் பற்றிய கதை இது. பொதுவாக கார் லோன் வாங்கிவிட்டு ஒழுங்காக தவணை கட்டாத ஆட்களின் கார்களை, அவர்களுக்கே தெரியாமல் சீஸ் செய்ய பல நடைமுறைகள், யுக்திகள், தொழில் நுணுக்கங்கள் உள்ளன. அவற்றை விரிவாகப் படத்தில் காட்டியுள்ளார்களாம். இதன் பின்னணியில் உள்ள பைனான்சியர்கள், தாதாக்கள், ரவுடிகள் பற்றிய நிழல் உலகத்தையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'பர்மா' படமும் இந்தக் கதைதான். ஏன்... விக்ரம் நடித்த ஸ்கெட்ச் கதையின் சில காட்சிகளும் இப்படித்தானே இருக்கும்... அது எப்படி 'சீசர்' படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் போனது!
இயக்குநர் ஜி.எம்.குமார் கதையை இப்போது எதற்காக சொன்னோம் என்பது புரிந்திருக்குமே!
-வீகேஎஸ்
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.
Related Articles
விரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்?
முடிவுக்கு வராத சினிமா ஸ்ட்ரைக் பேச்சுவார்த்தை!
28 நாளாச்சு.... இன்னும் சினிமா ஸ்ட்ரைக் முடியாமல் தொடர்வது ஏன்?
தமிழ் சினிமா ஸ்ட்ரைக்... என்னதான் தீர்வு?
தயாரிப்பாளர்கள் - டிஜிட்டல் நிறுவனங்கள் மோதல் காரணம் என்ன?
லாவணிக் கச்சேரி நடத்தும் தமிழ் சினிமா!
அட்லீக்கு ஒரு நியாயம்... விக்கிக்கு ஒரு நியாயமா ஞானவேல்ராஜா?