»   »  கபாலி 2... அதை நான் சொல்லக் கூடாது... சூப்பர் ஸ்டார்தான் சொல்ல வேண்டும்!

கபாலி 2... அதை நான் சொல்லக் கூடாது... சூப்பர் ஸ்டார்தான் சொல்ல வேண்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி வெளிவந்த நாளிலிருந்தே, அதன் க்ளைமாக்ஸை வைத்து 'கபாலி 2' குறித்து பல செய்திகளை, யூகங்களை மீடியா வெளியிட்டு வருகிறது.

கபாலி படம் வெளியான இரண்டாம் நாளே இதுகுறித்து நாம் கலைப்புலி தாணுவிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர் அளித்த பதில்: "அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அதைவிட பேரானந்தம் எனக்கு வேறெதுவும் இருக்காது. ஆனால் அதை நானோ மற்றவர்களோ சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் சொல்ல வேண்டும். அவர் அனுமதி அளித்தால் நான் எப்போதும் தயார். அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்," என்று கூறியிருந்தார்.


Is Rajini okays for Kabali 2?

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் சில செய்தி சேனல்களில் கபாலி 2 குறித்து தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. உற்சாகமான ரசிகர்கள் இதனை திரும்பத் திரும்ப சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று மீண்டும் கலைப்புலி தாணுவிடம் கபாலி 2 குறித்தும், இப்போது அதுபற்றி வலம் வரும் செய்திகள் குறித்தும் கேட்டோம்.


"அப்படி எதுவும் இல்லை. மீண்டும் சொல்கிறேன்... கபாலி 2 தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. ஆனால் அது பற்றி ரஜினி சார் மட்டும்தான் சொல்ல முடியும். நானோ வேறு யாருமோ பேசக் கூடாது. வாய்ப்பு அமைந்தால் அதை ரஜினி சாரே சொல்வார்," என்றார்.


க்ளியராயிடுச்சா!

English summary
Kalaipuli Thanu once again said that only Rajini can announce the sequel for Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil