முட்டையால் தோற்ற ராஜு...தாமரைக்காக விட்டுக் கொடுத்தாரா ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் 74 வது நாளில் நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக போட்டியாளர்களுக்கு 8 டாஸ்க்கள் நடத்தப்பட்டது. இதன் ஆறாவது டாஸ்க் இன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ராஜு, தாமரை, அபினய், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று நடத்தப்பட்ட ஆறாவது டாஸ்கில் ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை சிந்தாமல் குடிக்க வேண்டும். பிறகு வலைகளுக்கு கீழ் தவழ்ந்து செல்ல வேண்டும். பிறகு அங்கு வைக்கப்பட்டுள்ள பிளாக்களில் பிக்பாஸ் லோகோ வரும் வகையில் சரியாக அடுக்க வேண்டும். அதை முடித்த பிறகு சாக்கு பைக்கிற்கு சென்று, குதித்து குதித்து வந்து மூன்று முட்டைகளை சிந்தாமல் குடிக்க வேண்டும்

வெளியேறி ராஜு
இந்த டாஸ்கில் அமீர் முதல் ஆளாக இலக்குகளை கடந்து பெல்லை அடித்தார். இரண்டாவதாக அபினய் டாஸ்க்கை முடித்தார். மூன்றாவதாக ராஜு வந்த போதிலும், முட்டையை குடிக்க முடியவில்லை என பின் வாங்கினார். கடைசியாக வந்த தாமரை அனைத்தையும் முடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறி சென்றார். ராஜு இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

முட்டையால் போச்சு
ஆனால் ஆரம்பம் முதலே மெதுவாக டாஸ்க்கை செய்தார் ராஜு. அப்படி இருந்தும் மூன்றாவது இடத்திற்கு வந்தார் ராஜு. அவர் அடுத்த சுற்றுக்கு போவதற்கு வாய்ப்பு இருந்தும், முட்டையை குடிக்க முடியவில்லை. வாந்தி வருகிறது என சொல்லி ஓடினார். ஆனால் கடைசியாக வந்த தாமரை அனைத்தையும் முடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

விட்டுக் கொடுத்தாரா
இதை பார்த்த அனைவருக்கும் தாமரை வெளியேறி விடக் கூடாது என்பதற்காக ராஜு விட்டு கொடுத்ததை போல் உள்ளதே என்ற சந்தேகம் எழுந்தது. பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல அமீர், தாமரை உள்ளிட்டோருக்கும் இந்த சந்தேகம் வந்து நேரடியாக கேட்டு விட்டனர்.

இது தான் காரணமா
ஆனால் அதை மறுத்த ராஜு, பச்சை முட்டையை எனக்கு குடிக்க பிடிக்காது. முட்டை டாஸ்க் மட்டும் இல்லை என்றால் உன்னை எல்லாம் அடித்து தூக்கி போட்டிருப்பேன் என்றார். என்ன தான் ராஜு இப்படி சொல்லி சமாளித்தாலும் மக்கள் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை காரணமாகவும், கடந்த சில வாரங்களாகவே தாமரை வெளியேற்றப்படலாம் என்ற பேச்சு அடிபடுவதாலும் அவர் விட்டுக் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











