»   »  சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா ராம் ரஹீம் சிங்: உண்மை என்ன?

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா ராம் ரஹீம் சிங்: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: காமக்கொடுரன் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பது தெரிய வந்துள்ளது.

2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தலித் தலைவர் ஸ்வதேஷ் கிரத் ராம் ரஹீம் சிங் பற்றி கூறியதாவது,

தண்டனை

தண்டனை

சிறையில் அடைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் தனக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும் மண்டியிட்டு என்னை தூக்கிலிடுங்கள், நான் இனி வாழ விரும்பவில்லை என்று கதறினார்.

தூக்கம்

தூக்கம்

சிறையில் அடைத்த நாள் அன்று இரவு ராம் ரஹீம் சிங் தூங்கவே இல்லை. கடவுளே நான் என்ன தவறு செய்தேன் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

விஐபி

விஐபி

சிறையில் ராம் ரஹீம் சிங்கை பிற கைதிகளை போன்றே நடத்துகிறார்கள். அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. சக கைதிகள் அவர் மீது கோபத்தில் இருப்பதால் அவரை தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர்.

கோபம்

கோபம்

ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இது குறித்து அறிந்த கைதிகள் ராம் ரஹீம் சிங் மீது கோபம் அடைந்தனர். அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார் கிரத்.

English summary
Ever since, Gurmeet Ram Rahim Singh has been sentenced to twenty years in jail for raping two minors, people are keen to know if he will be given any special treatment inside the prison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil