twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளி போகிறதா... இதுல இவரு வேறயா ?

    |

    ஐதராபாத் : இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக சொல்லப்படும் காரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    பச்சை கலர் லிப்ஸ்டிக்.. இதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும்.. வனிதாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்! பச்சை கலர் லிப்ஸ்டிக்.. இதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும்.. வனிதாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

    எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் - இரத்தம் ரணம் ரெளத்திரம் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

    இத்தனை கோடி பட்ஜெட்டா

    இத்தனை கோடி பட்ஜெட்டா

    தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்டு, பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சுதந்திர போராட்டத்தையும், நட்பையும் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இது தான் காரணமா

    இது தான் காரணமா

    நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் கேரளா, டில்லி, மகாராஷ்டிரா, உத்திரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டில்லியில் தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு சமயத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை ரிலீஸ் செய்தால் அது படத்தின் வசூலை பாதிக்கும் என படக்குழு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

     தயாரிப்பாளர் என்ன சொல்கிறார்

    தயாரிப்பாளர் என்ன சொல்கிறார்

    ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக வெளியான தகவல் பற்றி தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது, அதை அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தமிழகத்தில் தியேட்டர் உரிமத்தை பெற்றுள்ளவர்களும், தயாரிப்பாளர்களும் இதை மறுத்து, படம் தள்ளிவைக்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இவரு வேறயா

    இவரு வேறயா

    இதற்கிடையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன டைரக்டர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்ஆர்ஆர் படத்தை மக்கள் தியேட்டரில் வந்து பார்க்க அரசு அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்வதானால் யாராக இருந்தாலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும். ஒமைக்ரானை தடுக்க இது தான் சிறந்த வழி. ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கவனமாக இருக்க தவறி விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    கொஞ்சும் தமிழில் பேசிய Alia Bhatt & Jr.NTR | Alia Bhatt Speech in RRR promotion
    தள்ளிவைக்கப்படுமா

    தள்ளிவைக்கப்படுமா

    ரிலீசுக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் ஒமைக்ரான் பரவலால் ஆர்ஆர்ஆர் படம் நிஜமாகவே தள்ளி வைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவே சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக தான் ஐதராபாத்தில் டிசம்பர் 30 ம் தேதி நடக்க இருந்த ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Rumors spread that RRR release will postponed due to omicron. But producers of this movie denied this rumours. It is also said that the film crew considers that if RRR releases the film during the night time curfew it will affect the collection of the film. On the other hand, Ramgopal Varma on his Twitter page, the government should not allow people to come and see the RRR movie in the theater.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X