»   »  சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாவது புதுப்பேட்டை -2 ஆ.. யுவன் சொன்ன ரகசியம்!

சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாவது புதுப்பேட்டை -2 ஆ.. யுவன் சொன்ன ரகசியம்!

Written By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் 36வது படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படத்திற்கான பணிகள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சூர்யா நீண்ட நாட்களாக சரியான ஹிட் கொடுக்க காத்து கொண்டு இருக்கிறார். அதிகம் எதிர்பார்த்த தானா சேர்ந்த கூட்டம் படம் சரியாக செல்லவில்லை.

இந்த நிலையில் முதல்முறையாக அவர் செல்வராகவனுடன் சேர்ந்து இருக்கிறார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்ற பெரிய நடிகர்கள் பக்கம் செல்லாத, செல்வா, முதல்முறை சூர்யாவை இயக்குகிறார்.

நாளை

நாளை

இந்த நிலையில் படத்தில் பெயர் பர்ஸ்ட் லுக் என்ன என்று நாளை வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே இவரது 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் டிரைலர் வரை ரிலீசாகி இன்னும் வெளிவராமல் இருக்கிறது. நாளை என்ன பெயர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மீண்டும் யுவன்

மீண்டும் யுவன்

90களில் பிறந்து செல்வா அறிமுகம் ஆன சமயத்தில் பள்ளியோ, கல்லூரியோ படைத்தவர்களுக்கு தெரியும் செல்வா-யுவன் கூட்டணியின் மேஜிக். அதே கூட்டணி நெஞ்சம் மறப்பதில்லைக்கு பின் மீண்டும் இப்போது சேர்ந்து இருக்கிறது. சூர்யாவிற்கு நீண்ட நாளுக்கு பின் கிட்டார் எடுக்கிறார் யுவன்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த நிலையில் இந்த படம் புதுப்பேட்டை அளவிற்கு மாஸாக இருக்கும் என்று யுவன் கூறியுள்ளார். அந்த படம் என்ன அழுத்தத்தை கொடுத்ததோ அதே அழுத்தத்தை இந்த படமும் கொடுக்கும் என்று கூறியுள்ளார். படத்திற்கான பின்னணி இசை நன்றாக வருகிறது என்றும் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை -2

புதுப்பேட்டை -2

இந்த நிலையில் இந்த படம் புதுப்பேட்டை -2வா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. ஏற்கனவே செல்வா, புதுப்பேட்டை -2 சீக்கிரம் எடுப்பேன் என்று கூறியிருந்தார். எனவே இந்த படம் அப்படி இருக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

English summary
Selvaragavan directing a new film with Surya. The first look of the film is releasing tomorrow. People are saying that, it will be like Pudhupettai-2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil