செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 கைவிடப்படுகிறதா ?...ஏன் என்னாச்சு ?

சென்னை : இந்த ஆண்டு துவக்கத்தில், புத்தாண்டு சர்ப்ரைசாக தம்பி தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க போவதாக அறிவித்தார். அதோடு படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். இந்த ஃபோட்டோ படுவைரலானது.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்டிரியா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். வரலாற்று, த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டது. வித்தியாசமான கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கிடப்பில் போடப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 2

கிடப்பில் போடப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 2

2010 ல் வெளிவந்த வரலாற்று படமான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராக உள்ளதாகவும், இந்த படம் 2024 ல் ரிலீஸ் ஆகும் என்றும் கூறினார்கள். ஆனால் இந்த படத்தின் வேலைகளை நிறுத்தி விட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

என்ன காரணம் என நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, ஆயிரத்தில் ஒருவன் 2, பல கோடிகளை செலவழித்து மிக பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்ட படமாம். ஏற்கனவே இந்த படம் பற்றிய வரலாற்று ஆய்வு மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷனுக்கு என பல கோடிகளை தயாரிப்பாளர்கள் செலவிட்டு விட்டனராம்.

பட்ஜெட் தாங்காதுப்பா

பட்ஜெட் தாங்காதுப்பா

இதனால் படத்தின் வேலைகளை தொடர்ந்தால் அது பட்ஜெட்டை தாண்டி மிக அதிகமாக போய் விடும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் நினைப்பதால், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு தான் படத்தை இப்போதைக்கு வேண்டாம் என ஓரங்கட்டி வைத்து விட்டார்களாம்.

நடிப்பில் பிஸியான செல்வராகவன்

நடிப்பில் பிஸியான செல்வராகவன்

இதனால் தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க போவதாக கூறிய செல்வராகவன், தற்போது அதை விட்டு விட்டு சாணி காயிதம் படத்தில் நடிக்க போய் விட்டாராம். முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கிறார். இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இத்தனை படங்களா

ஒரே நேரத்தில் இத்தனை படங்களா

அதே சமயம் தனுஷும் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் வேலைகளை துவக்கி விட்டார். ஏற்கனவே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதோடு ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் படம், கர்ணன் டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டி ஆகி உள்ளார்.

Recommended Video

Selvaraghavan ஊம குசும்பு, Dhanush Silent Killer | Dr.Karthika shares secret about her Brothers
10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சகோதரர்கள்

10 ஆண்டுகளுக்கு பின் இணையும் சகோதரர்கள்

அது மட்டுமின்றி தனுஷ், செல்வராகவன் இணைந்து நானே வருவேன் படத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்க உள்ளது. இந்த படத்தின் மூலம் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனும், தம்பியும் இணைய உள்ளனர். இதற்கு முன் 2011 ல் மயக்கம் என்ன படத்தில் தான் இருவரும் இணைந்து பணியாற்றினர். நானே வருவேன், இவர்கள் இருவரும் இணையும் ஐந்தாவது படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X