என்னது...மீண்டும் நடிகராகிறாரா ஷங்கர்... எந்த படத்தில் தெரியுமா ?
சென்னை : கமலை வைத்து, டைரக்டர் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் பல பிரச்சனைகளால், பாதியில் நிற்கிறது. இதனால் ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படத்தை இயக்கும் பணியை துவக்கி உள்ளார் ஷங்கர். ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
ராம் சரணின் 15 வது படமாக தயாராகி வரும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கிறார். இது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50 வது படமாகும். அதனால் இதை பிரம்மாண்ட படமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆர்சி 15 என பெயரிடப்பட்டுள்ளது.

ஆர்சி 15 போஸ்டரில் ஷங்கர்
இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஹீரோ ராம் சரணுடன் கூட்டமாக பலர் படிகளில் ஏறி போவது போன்ற காட்சி அமைந்துள்ளது. அப்படி ராம் சரண் உடன் நடந்து வருபவர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர். மலையாள நடிகர் ஜெயராமும் இந்த குழுவில் நடந்து வருகிறார்.

மீண்டும் நடிக்கிறாரா ஷங்கர்
இதனால் பான் இந்தியா படத்தின் மூலம் ஷங்கர் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் மீண்டும் நடிக்க வந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இது படம் பற்றிய பரபரப்பிற்காக உருவாக்கப்பட்ட போஸ்டரா அல்லது உண்மையிலேயே ஆர்சி 15 படத்தில் ஷங்கர் நடிக்கிறாரா என தெரியவில்லை.

காமெடியனாக ஷங்கர்
நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்கு வந்தவர் ஷங்கர். பூவும் புயலும், வசந்த ராகம் போன்ற சில படங்களில் ஜுனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் ஷங்கர். சீதா என்ற படத்தில் காமெடியனாகவும் நடித்துள்ளார் ஷங்கர். அதற்கு பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்காதால் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை செய்து, பிறகு டைரக்டர் ஆகி விட்டார். டாப் டைரக்டர் ஆன பிறகு, தனது படங்களில் சிறிய ரோல்களில் கூட ஷங்கர் தலைகாட்டியது இல்லை. தற்போது ஆர்சி 15 படத்தில் கெஸ்ட் ரோலில் ஷங்கர் நடிக்கிறாரா அல்லது முக்கிய ரோலில் நடிக்கிறாரா என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Recommended Video

டைட்டில் இது தானா
லேட்டஸ்ட் தகவலாக ஆர்சி 15 படத்திற்கு விஸ்வம்பரா என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம். இந்த படத்தில் சுனில், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

முக்கிய படங்களில் ராம் சரண்
2022 ல் இந்த படம் ரிலீசாக உள்ளது. ராம் சரண் சமீபத்தில் தான் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தனது தந்தை சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் முக்கிய ரோலில் ராம்சரண் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன ஷங்கர்
சமீபத்தில் தான் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் புதிய படமான விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதற்காக சூர்யா, கார்த்தி, ஜோதிகா, 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து ஷங்கரும் ட்வீ ட் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











