சூர்யா படத்திற்கு தான் அப்படின்னா...சிம்பு படத்திற்கும் அதே பிரச்சனை தானா?
சென்னை : சூர்யாவின் சூர்யா 41 படத்திற்கு படத்தில் சமீப காலமாக நடந்து வரும் அதே குழப்பம் தான் சிம்புவின் புதிய படத்தில் தொடர்ந்து வருகிறது. இதனால் இந்த தகவல்கள் உண்மையா, இல்லையா என தெரியாமல் ரசிகர்கள் உச்சகட்ட குழப்பத்தில் உள்ளனர்.
சூர்யா 41 படத்தின் டைரக்டர் மாற்றப்பட்டார். சூர்யா 41 கைவிடப்பட்டது. சூர்யா - டைரக்டர் பாலா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா 41 படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டார் என அடிக்கடி தகவல் பரவி வருகிறது. இப்படி வதந்தி பரவுவதும், பிறகு படக்குழுவினர் அப்டேட் வெளியிட்டு விளக்கம் சொல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்
இதே போல் தான் சிம்பு நடிக்க உள்ள கொரோனா குமார் படத்திற்கும் நடந்து வருகிறது. மாநாடு படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு சிம்பு அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மாநாடு படம் 117 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே அறிவித்து விட்டதால் சிம்பு அடுத்து நடிக்கும் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. பத்து தல படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடந்து வருகிறது.

ஷுட்டிங்கை தள்ளி வைத்த சிம்பு
பத்து தல ஷுட்டிங் நிறைவடைய இன்னும் 10 முதல் 15 நாள் ஷுட்டிங் மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டுள்ளதால் ஷுட்டிங் வேலைகள் தள்ளி வைத்துள்ளார் சிம்பு. இதனால் பத்து தல படத்தின் வேலைகள் தாமதமாகி வருகிறது.

கொரோனா குமார் கைவிடப்பட்டதா
பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு, விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய டைரக்டர் கோகுல் இயக்கும் காமெடி படமான கொரோனா குமார் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்த படம் கை விடப்பட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. பிறகு அது இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இவர் தான் புது டைரக்டரா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாாக, காமெடி படமான கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லையாம். இதை தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடமே சிம்பு ஓப்பனாக கூறி விட்டாராம். இதனால் கொரோனா குமார் படத்திற்கு பதிலாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டைரக்டர் லிங்குசாமி - சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











