நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு?

சென்னை: நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் டிரைலர் வெளியாகி உள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது ஈஸ்வரன்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, பால சரவணன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிம்புவின் ஈஸ்வரன் டிரைலரின் இறுதியில் நடிகர் தனுஷை சீண்டும் வசனம் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

லக்கி நம்பர் 9

லக்கி நம்பர் 9

9ம் நம்பர் சிம்புவுக்கு ரொம்ப லக் போல தெரிகிறது. எல்லா அறிவிப்பும் 9ம் நம்பர் கூட்டுத் தொகையாக வரும்படி சிம்பு தனது பட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறர. ஈஸ்வரன் டிரைலரையும் இன்று மாலை 5:04 மணிக்கு ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் நயன்தாராவை சிம்பு மறக்கவில்லையோ என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஈஸ்வரன் டிரைலர்

குடும்பத்தில் இருக்கும் மொத்த பேரையும் வில்லன்கள் குரூப் அழிக்க திட்டமிடுகிறது. அதில், ஒத்த உசுரை கூட போக விடாமல் தடுக்க ஈஸ்வரன் போராடும் கதையே திரைக்களம் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. நிதி அகர்வாலுடன் ரொமான்ஸ், இன்னொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா என சிம்பு படம் கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது.

ரியாலிட்டி சண்டை

ரியாலிட்டி சண்டை

வழக்கம் போல இல்லாமல், இந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு சண்டை காட்சிகளை ரியாலிட்டியாக சிம்பு செய்துள்ளார் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. சூப்பர் ஸ்லிம்மாக உடல் எடையை குறைத்தது சண்டை காட்சிகளில் அவருக்கு மிகவும் உறுதுணையாக மாறி இருக்கிறது.

கை கன்ட்ரோல் இல்லை

கை கன்ட்ரோல் இல்லை

நாயகி நிதி அகர்வாலுடன் முத்தம், தனியாக ரொமான்ஸ் என ரவுண்டு கட்டுகிறார் சிம்பு. கன்ட்ரோல் நம்ம கையில தான் இருக்கணும் என நிதி அகர்வால் கூற, என் கை கன்ட்ரோல் இல்லை என சிம்பு வசனம் பேசும் இடம், வின்டேஜ் சிம்பு இஸ் பேக் என்றே சொல்ல வைக்கிறது. பொங்கலுக்கு செம என்டர்டெயின்மென்ட் கன்ஃபார்ம்.

தனுஷை சீண்டுகிறாரா

தனுஷை சீண்டுகிறாரா

சிம்புவுக்கும் தனுஷுக்கும் தான் சினிமாவில் எப்போதும் கிளாஷ். அதை மீண்டும் தொடும் வகையில் டிரைலரின் கடைசி வசனமாக, "நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா" என்கிற வசனத்தை சிம்பு பேசுகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் பட்த்தை குறிப்பிடும் வகையில் இந்த வசனம் அமைந்துள்ளது என சமூக வலைதளத்தில் சிம்பு, தனுஷ் ரசிகர்கள் சண்டை நடக்கிறது.

ரிலீஸ் ஆகுமா

ரிலீஸ் ஆகுமா

50 சதவீதம் தியேட்டர்கள் இருக்கை என்று மாற்றப்பட்டால், மாஸ்டர் திரைப்படத்தை மட்டுமே வெளியிடுவோம், ஈஸ்வரன் படத்தை திரையிட மாட்டோம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், பொங்கலுக்கு திட்டமிட்டபடி சிம்புவின் ஈஸ்வரன் வெளியாகுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், தடைகளை தாண்டி மாஸ்டரும் ஈஸ்வரனும் திரைக்கு வரும் என்றே தெரிகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பும், தியேட்டர் அதிபர்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X