Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Ultimate: இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் சுரேஷ் தாத்தா வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரம் யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.
பழைய போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
தியேட்டர்களில்
100%
பார்வையாளர்களுக்கு
அனுமதி...கொண்டாட்டத்தில்
ரசிகர்கள்

முதல் வார எலிமினேஷன்
ஏகப்பட்ட மசாலாக்களை தூவி நிகழ்ச்சியை பிரமாதப்படுத்த போகிறேன் என பெரிய அளவிலான பில்டப் புரமோவுடன் வந்த சுரேஷ் சக்கரவர்த்தியை முதல் வாரத்திலேயே நீங்க கொளுத்திப் போட்டது போடும் எதுவுமே சரியாக பற்றவில்லை என நினைத்து முதல் எலிமினேஷனாக பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர்.

காப்பாற்றப்பட்ட வனிதா
முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் விளிம்பு நிலையில் இருந்த வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் இந்த வாரம் விரட்டி விடப் போகிறார்கள் என நினைத்த பிக் பாஸ் டீம் அவரை தங்களது பாணியில் புதிய முயற்சி செய்து இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற விடாமல் காப்பாற்றி விட்டனர். அவரை வைத்துத் தானே சில வாரங்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.

இந்த வார நாமினேஷனில்
இந்நிலையில், இந்த வாரம் அதிகளவிலான ஹவுஸ்மேட்களின் ஓட்டுக்களுடன் பாலாஜி முருகதாஸ், ஜூலி, தாமரை, தாடி பாலாஜி, சுஜா மற்றும் அபிநய் உள்ளிட்ட 6 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். நிரூப், அபிராமி, ஷாரிக், அனிதா சம்பத், வனிதா விஜயகுமார், சுருதி உள்ளிட்டோர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

ஆபத்தான இடத்தில்
இந்த வாரம் அதிக ஓட்டுக்களுடன் பாலாஜி முருகதாஸ் முதல் நபராக சேவ் ஆக போகிறார் என்பது நாமினேட் செய்த உடனே ஹவுஸ்மேட்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். இந்நிலையில், ஆபத்தான இடத்தில் அபிநய், சுஜா, தாடி பாலாஜி மூவரும் குறைவான ஓட்டுக்களுடன் இருந்து வந்த நிலையில், யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.

எலிமினேட் ஆன சுஜா
தாடி பாலாஜி அல்லது அபிநய் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து கடுமையாக டாஸ்க் எல்லாம் செய்த சுஜா வருணி தான் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி உள்ளார் என்கிற தகவல் வழக்கம் போல லீக்காகி உள்ளது. நாளை அதிகாரப்பூர்வமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அவரது எலிமினேஷன் காட்சிகள் இடம்பெறும் என தெரிகிறது.

இந்த வாரமும் எஸ்கேப்
பிக் பாஸ் சீசன் 5ல் எப்படி அபிநய் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டு வந்தாரோ அதே போல இந்த வாரமும் அபிநய் எலிமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி உள்ளார். சுஜா வருணிக்கும் அபிநய்க்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் தான் வித்தியாசம் எனக் கூறுகின்றனர்.
Recommended Video

அடுத்த வாரம்
அடுத்த வாரமும் அபிநய் எலிமினேட் ஆகமாட்டார் என்பதை உறுதி செய்த நெட்டிசன்கள் தாடி பாலாஜி தான் அடுத்த எலிமினேஷன் என இப்போதே ஆருடம் கூறி வருகின்றனர். ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்துள்ள நிலையில், ஹவுஸ்மேட்கள் மத்தியில் அவருக்கான இடம் கிடைக்கவில்லை என்பதனாலே தொடர்ந்து அவர் நாமினேட் ஆகி வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.