பீஸ்ட் டீசர் இந்த தேதியிலா ரிலீஸ் ஆகப் போகுது.. நெல்சன் ஒரு முடிவோடத்தான் இருக்காரு போல!

சென்னை: அரபிக் குத்து பாடல் 215 மில்லியனை கடந்து டிரெண்டாகி வருகிறது. ஜாலியோ ஜிம்கானா பாடல் 22 மில்லியனை கடந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு பீஸ்ட் படத்தின் டீசர் மீதுதான். இசைவெளியீட்டு விழா இல்லை என முடிவு செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் பீஸ்ட் டீசர் ரிலீசுக்கு வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் #BeastTeaser என டிரெண்டாகி வருகிறது.

பீஸ்ட் vs மான்ஸ்டர்

பீஸ்ட் vs மான்ஸ்டர்

கேஜிஎஃப் சாப்டர் 2 மற்றும் பீஸ்ட் படங்களுக்கு இடையே தான் அடுத்த மாதம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வெளியாகிறது. இதில், வெல்லப்போவது யார்? என்கிற போட்டியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எத்தனை தியேட்டர்கள்

எத்தனை தியேட்டர்கள்

தமிழ்நாடு மொத்தம் 800 திரையரங்குகளில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என்றும் யஷ்ஷின் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் இங்கே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா மற்றும் ஆந்திராவில் பீஸ்ட் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் வசூல் பாதிக்குமா

ஆர்ஆர்ஆர் வசூல் பாதிக்குமா

வரும் மார்ச் 25ம் தேதி ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகும் நிலையில், ஏப்ரல் 13ம் தேதியே பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் வெறும் 20 நாட்கள் மட்டுமே அதிக தியேட்டர்களில் அந்த படம் ஓடும் என்றும் அதற்கு பிறகு அதன் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் டிராக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அத்தனை நாட்கள் ஓடினாலே வசூலை ராஜமெளலி ஈட்டிவிடுவார் என்றும் கூறுகின்றனர்.

ரெட் ஜெயண்ட் வெளியீடு

ரெட் ஜெயண்ட் வெளியீடு

பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பீஸ்ட் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இதன்மூலம் தியேட்டர்கள் கிடைப்பதில் இந்த படத்துக்கு எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றும் முதல் நாளில் அதிக ஷோக்கள் திரையிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் டீசர் எப்போ

பீஸ்ட் டீசர் எப்போ

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா வெளியாகி ஹிட் அடித்த நிலையில், பீஸ்ட் டீசரை காண ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். #BeastTeaser ஹாஷ்டேக்கை பதிவிட்டு பீஸ்ட் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த தேதியிலா

அந்த தேதியிலா

இந்நிலையில், பீஸ்ட் டீசர் வரும் ஏப்ரல் 1ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்கிற தகவல் கசிந்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. நிஜமாகவே ஏப்ரல் 1ல் டீசர் வெளியாகுமா? அல்லது ஏப்ரல் ஃபூல் செய்ய இயக்குநர் நெல்சன் பிளான் பண்ணி விட்டாரா என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரெக்கார்டு வைக்கும்

ரெக்கார்டு வைக்கும்

பீஸ்ட் டீசர் ஏப்ரல் 1ம் தேதி அல்ல எந்த தேதியில் வந்தாலும் முந்தைய ரெக்கார்ட்டுகளை எல்லாம் உடைத்து தள்ளி விட்டு புதிய ரெக்கார்டு படைக்கும் என தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக்கை வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். RRR படத்தின் ரிலீஸ் உடன் பீஸ்ட் படத்தின் டீசர் வெளியானால் நல்லா இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் வெகு விரைவிலேயே பீஸ்ட் மோடுக்கு மாற விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X