twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Super Deluxe : ஆபாச வசனங்கள்.. அருவருக்கும் காட்சிகள்.. வக்கிரபுத்தியை விதைக்கிறதா சூப்பர் டீலக்ஸ்?

    சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

    |

    Recommended Video

    Super Deluxe Movie Audience Review: விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் எப்படி இருக்கு?- வீடியோ

    சென்னை: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

    விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, 8 வருடங்கள் கழித்து இயக்கியுள்ள படம் இது. இதனால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், ஆரண்ய காண்டம் ஏற்படுத்திய தாக்கம் தான். வழக்கமான கதை சொல்லலில் இருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. எனவே இந்த படம் ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்தது.

    சேரனின் 'திருமணம்'... ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது! சேரனின் 'திருமணம்'... ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது!

    எகிறிய எதிர்பார்ப்பு

    எகிறிய எதிர்பார்ப்பு

    விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியதால், சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    கலவையான விமர்சனம்

    கலவையான விமர்சனம்

    காரணம் ஆரண்ய காண்டம் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் தான்.

    ஏ சான்றிதழ்

    ஏ சான்றிதழ்

    'ஏ' சான்றிதழ் பெறப்பட்ட படம் தான் என்றாலும், படத்தில் ஏஏஏ...கப்பட்ட இரட்டை அர்த்த மற்றும் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சில காட்சிகளும் அருவருப்பாக இருக்கின்றன. இதனால் குமாரராஜாவை நிறைய பேர் திட்ட தொடங்கி இருக்கின்றனர்.

     உதாரணமாக ஒரு காட்சி

    உதாரணமாக ஒரு காட்சி

    உதாரணமாக, சமந்தா - பகத் பாசில் உரையாடலின் போது, சமந்தாவை பார்த்து பகத் சொல்லுவார், "சினிமால வில்லன் சும்மா தான் சொல்லுவான் உன்ன போட்டு தள்ளிடுவேன்னு... ஆனா நீ உண்மையிலேயே போட்டு தள்ளிட்டீயே"... இந்த வசனம் இடம்பெறும் சூழல் எதுவென்றால், தனது முன்னாள் காதலனுடன் சமந்தா உல்லாசம் அனுபவித்து கொண்டிருக்கும் போது, அந்த இளைஞன் அப்படியே இறந்துவிடுவான். அதன் பிறகு கணவனும் மனைவியும், அதாவது சமந்தாவும், பகத் பாசிலும் அந்த சலடத்தை அழிப்பதற்காக முயற்சிக்கிறபோது இந்த வசனம் இடம்பெறும். இது ஒரு சோற்று உதாரணம் தான். இதுபோல் ஏகப்பட்ட வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

    உன்னை போட்டவன்

    உன்னை போட்டவன்

    மற்றொரு காட்சியில் "உன்னை போட்டவன் செத்துட்டான்... போட கூப்பிட்டவனும் செத்துட்டான்... நான் உன்ன தொடக்கூட மாட்டேன்பா" என சமந்தாவிடம் சொல்வார் பகத். அதுபோல், டீனேஜ் பசங்க வரும் காட்சிகளிலும் இதுபோன்ற வசனங்களே பிரதானமாக இடம்பெறும்.

    அருவருப்பின் உச்சம்

    அருவருப்பின் உச்சம்

    பகவதி பெருமாள் சம்மந்தப்பட்ட காட்சிகள், ஆபாசம் என்ற எல்லையை மீறி அருவருப்பாகவே இருக்கும். 'இது ஒரு 'ஏ' படம். அந்த புரிதலுடன் தான் படத்தை பார்க்க வேண்டும்', 'படத்தை படமாக மட்டுமே பார்த்துவிட்டு வருவது சிறப்பு', என சிலர் படத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். 'என்னதான் ஏ படமாக இருந்தாலும், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது", என்கின்றனர் சிலர். இப்படி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

    நான்கு விதமான செக்ஸ்

    நான்கு விதமான செக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ் படத்தின் மைய கருவே செக்ஸ் தான். நான்கு கதைகளை எடுத்துக்கொண்டு, அந்த நான்கு கதைகளிலும் செக்ஸ் எப்படி கையாளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை பற்றி பேசுகிறார் இயக்குனர். இதை தாண்டி, படத்தில் அரசியல், உளவியல், சித்தாந்தம் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தத்துவார்த்தமான அனுமுறையில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

    வக்கிரபுத்தியை விதைக்கிறதா?

    வக்கிரபுத்தியை விதைக்கிறதா?

    படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உணர்வு ஏற்படும். அந்த உணர்வின் அடிப்படையிலேயே விவாதங்களும் முளைக்கின்றன. எனவே 'சூப்பர் டீலக்ஸ்' வக்கிரபுத்தியை விதைக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூற இயக்குனரே கடமைபட்டவர்.

    English summary
    A debate is going on in social media's that, whether Super deluxe is good or bad movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X