»   »  பிரபல நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா, திருமணமான தயாரிப்பாளருடன்...: பரபரக்கும் திரையுலகம்

பிரபல நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா, திருமணமான தயாரிப்பாளருடன்...: பரபரக்கும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஏன் தனக்கு திருமணம் நடந்ததை மறைக்கிறார் என்று மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. மின்னாமினுங்கு படத்திற்காக அவருக்கு விருது கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதை பெற்றார்.

டெல்லி சென்று தேசிய விருதை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருமணம்

திருமணம்

சுரபி லட்சுமிக்கு கடந்த 2014ம் ஆண்டு குருவாயூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றது. சுரபி தற்போது நடிப்போடு சேர்த்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சுரபி

சுரபி

சுரபியிடம் பிரபல மலையாள பத்திரிகை பேட்டி எடுத்தபோது தன் வீட்டில் பாட்டி, அம்மா, சகோதரர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கணவரை பற்றி அவர் பேசவே இல்லை.

மறைக்கிறாரா?

மறைக்கிறாரா?

முன்பும் கூட அளித்த பேட்டிகளின்போது அவர் தனக்கு திருமணமானது பற்றியோ, கணவர் பற்றியோ எதுவுமே கூறவில்லை. தனக்கு திருமணமானதை மறைக்கிறாரா சுரபி என்று மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிசுகிசு

கிசுகிசு

சுரபி தனது கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரபிக்கும் தமிழ் படம் ஒன்றின் தயாரிப்பாளருக்கும் இடையே கசமுசா என்று வேறு மலையாள திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

English summary
According to malayalam media reports, national award winning actress Surabhi Lakshmi is trying to hide her marital status.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil