என்னது....சூர்யாவும் இதையே செய்ய போகிறாரா...இது எக்ஸ்டிரா பிட் மாதிரி இருக்கே
சென்னை : சூர்யா- பாலா இணையும் படம் பற்றி தினமும் ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்து வருகிறது. ஆனால் இவற்றில் பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வெறும் பரபரப்பிற்காக சொல்லப்படுவதாக கூறப்படுகிறது.
18 ஆண்டு இடைவேளைக்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியில் பூஜையுடன் துவங்கப்பட்டது.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்
சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா, காது கேளாத, வாய் பேச முடியாத மீனவர் ரோலில் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி-தியேட்டர் எதில் ரிலீஸ்
ஜுலை மாதத்திற்குள் இந்த படத்தின் ஷுட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூரரை போற்று டைரக்டர் சுதா கொங்கராவும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சூர்யாவும் இதை செய்கிறாரா
பாலா இயக்கும் படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சூர்யா. இதனால் படத்தின் ஷுட்டிங் பயங்கர சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங்கிற்காக கன்னியாக்குமரியில் பெரிய வீடு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா 41 படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

யாரு அப்படி சொன்னது
ஏகே 61 படத்தில் அஜித், தளபதி 66 படத்தில் விஜய், சர்தார் படத்தில் கார்த்தி ஆகியோரை போலவே சூர்யாவும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாரா என தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, அந்த தகவலை மறுத்துள்ளனர். அதோடு, இந்த படத்தில் சூர்யா ஒரு கேரக்டரில் தான் நடிக்கிறார். ஆனால் மிக அழுத்தமான ரோல். இதற்காக சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

அட செம தகவலாக இருக்கே
இந்த படத்தில் சூர்யாவில் தங்கை ரோலில் தான் மமிதா பைஜி நடிக்கிறாராம். முதல் கட்ட ஷுட்டிங்கை கன்னியாகுமரியில் முடித்துக் கொண்டு, இரண்டாவது கட்ட ஷுட்டிங்கிற்காக படக்குழு மதுரை செல்ல உள்ளதாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங் குறைந்தது 40 நாட்கள் நடக்குமாம். அதை முடித்த பிறகு கோவா போக போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











