twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    190 படங்கள்.. இந்திய திரையுலகை கலக்கிய பழம்பெரும் நடிகை பயோபிக்கில் நடிக்கப் போகிறாரா தமன்னா?

    |

    சென்னை: இது பயோபிக் வாரம் என்பது போல, வரிசையாக பயோபிக் படங்களாக குவிந்து வருகின்றன.

    நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.

    டி 43... தனுசுடன் இணையும் மற்றொரு மாஸ்டர் நடிகர்... லேட்டஸ் தகவல் டி 43... தனுசுடன் இணையும் மற்றொரு மாஸ்டர் நடிகர்... லேட்டஸ் தகவல்

    தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

    சில்க் ஸ்மிதா பயோபிக்

    சில்க் ஸ்மிதா பயோபிக்

    கடந்த 2011ம் ஆண்டு இயக்குநர் மிலன் லுத்ரியா இயக்கத்தில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான டர்ட்டி பிக்சர் திரைப்படம் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக அமைந்தது. அப்பவே 117 கோடி வசூல் செய்து ஹிட் அடித்த அந்த படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    நடிகையர் திலகம்

    நடிகையர் திலகம்

    ஒரு பக்கம் விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் நாடு முழுவதும் வெளியாகி வரும் நிலையில், மறுபக்கம் பழம்பெரும் நடிகைகளின் பயோபிக் படங்களும் வெளியாகி வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.

    ஜெயலலிதா பயோபிக்

    ஜெயலலிதா பயோபிக்

    நடிகை சாவித்ரியை தொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை பலரும் திரைப்படமாக ஆக்கி வருகின்றனர். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி எனும் டைட்டிலில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வரும் மே 13ம் தேதி திரைக்கு வருகிறது.

    ஜமுனா பயோபிக்

    ஜமுனா பயோபிக்

    இந்நிலையில், அடுத்ததாக பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பயோபிக்கை படமாக்கும் முயற்சிகள் ஆரம்பித்து இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் சுமார் 190 படங்களில் நடித்து அசத்தியவர் ஜமுனா. இயக்குநர், அரசியல்வாதி என்றும் பன்முகத் தன்மை கொண்டவர்.

    16 வயதில்

    16 வயதில்

    1952ம் ஆண்டு உருவான புட்டிலு எனும் தெலுங்கு படத்தில் 16 வயதில் நாயகியாக அறிமுகமானார் ஜமுனா. பூர்வீகம் கன்னடமாக இருந்தாலும் தெலுங்கில் தான் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட மொழியிலும் நிறைய படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் பணம் படுத்தும் பாடு படத்தின் மூலம் அறிமுகமானார். மிசியம்மா, தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    தயாராகும் தமன்னா

    தயாராகும் தமன்னா

    பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பயோபிக்கில் நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், கதையை கேட்ட உடனே தமன்னாவும் ஓகே சொல்லி விட்டதாகவும், விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒடிடி மற்றும் திரையில்

    ஒடிடி மற்றும் திரையில்

    கடந்த நவம்பர் மாதமே வரும் என அறிவித்த நவம்பர் ஸ்டோரி, 11த் ஹவர் உள்ளிட்ட ஒடிடி வெளியீடுகள் மற்றும் அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான சீட்டிமார், F3, குர்துண்ட சீதாக்காலம் உள்ளிட்டவை தமன்னாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன.

    சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.

    English summary
    Latest buzz circulates in tollywood actress Tamannaah aim for Veteran actress Jamuna’s biopic. Official announcement will arrive soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X