நிஜமாவே தாமரைக்கு ஒன்றுமே தெரியாதா... பங்கமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து விட்டது. தனக்க ஒன்றுமே தெரியாது என சொல்லி, சொல்லியே இறுதிப் போட்டி வரை தாமரை நெருங்கி வந்து விட்டதாக கமல் உள்ளிட்ட அனைவரும் கூறி விட்டனர்.

Recommended Video

Thamarai Selvi Sentiment Drama போடுறாங்க?? | Bigg Boss Tamil

வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த சஞ்சீவும், தாமரை பற்றி இதே கருத்தை தான் முன்வைத்தார். பல சமயங்களில் ஒன்றும் தெரியவில்லை என தாமரையே பலரிடமும் கூறி உள்ளார். ஆனால் நேற்று தாமரை நடந்து கொண்ட விதம் ப்ரோமோவில் தொடங்கி, எபிசோட் வரை அனைவரையும் எரிச்சலடைய வைத்து விட்டது.

பார்ட்டினா என்னன்னு தெரியாதா

பார்ட்டினா என்னன்னு தெரியாதா

ஃபினாலே டிக்கெட் டாஸ்க் டின்னர் பார்ட்டியுடன் நடக்க போவதாக பிரியங்கா கத்திக் கொண்டே கூறும் போது, மிக அப்பாவிதனமாக முகத்தை வைத்துக் கொண்டு, பார்ட்டி என்றால் என்ன என கேட்கிறார். பார்ட்டி என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கா தாமரை அப்பாவியாக இருக்கிறார் என நெட்டிசன்கள் கடுப்பாகி தாமரையை கலாய்க்க துவங்கி விட்டனர்.

ஏன் சாப்பாடிற்காக அலைகிறாய்

ஏன் சாப்பாடிற்காக அலைகிறாய்

தாமரையிடம், பிரியங்கா பார்ட்டி என்றால் என்ன என்று விளக்கிய பிறகு, ஏன் எப்போதும் சாப்பாடு, சாப்பாடு என அலைகிறாய் என ரசிகர்களின் மைண்ட் வாய்சாக பேசுகிறார் தாமரை. ஆனால் அதே சமயம், ஓப்பன் நாமினேஷனின் போது பிரியங்காவிற்கு ஆதரவாக நிரூப்பை தாமரை நாமினேட் செய்வதை பிரியங்காவும் பாவனியிடம் சொல்லி கிண்டல் அடிக்கிறார்.

தாமரையை கலாய்க்கும் பிரியங்கா

தாமரையை கலாய்க்கும் பிரியங்கா

இவளுக்காக பேச போய் தான் நிரூப் என்னை கண்டபடி திட்டினான். ஆனால் மூன்று பேரை நாமினேட் செய்யுங்கள் என கூறியதும் இவ என் பேரை சொல்லுகிறாள். கடந்த வாரம் என்னை நாமினேட் செய்த தாமரை, இந்த வாரம் அப்படியே மாற்றி, எனக்காக நிரூப்பை நாமினேட் செய்வதாக கூறுகிறாள். இவள் சொல்லும் காரணத்தை கேட்டால் சிரிப்பாக வருகிறது என்கிறார்.

ஜெயிக்க வேண்டாம்

ஜெயிக்க வேண்டாம்

ஃபினாலே டிக்கெட் டாஸ்கின் போது, அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில், மக்கள் என்னை காப்பாற்றுவார்கள். எனக்கு இந்த டிக்கெட் வேண்டாம் என்கிறார். போட்டியில் உனக்கு ஜெயிக்கனுமா வேண்டாமா என திரும்ப திரும்ப பிரியங்கா கேட்டும், வேண்டாம் என்கிறார். நான் ஜெயிப்பதற்காக வரவில்லை என்கிறார்.

ஒன்றும் தெரியாமலா விளையாடுறீங்க

ஒன்றும் தெரியாமலா விளையாடுறீங்க

இதை கேட்டு கடுப்பாகும் சஞ்சீவ் ஒன்றுமே தெரியாமலா 85 நாட்கள் போட்டி விளையாடினீர்கள். பிக்பாசில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது என முகத்திற்கு நேராகவே கேட்கிறார். அப்போதும் கூட, போய் 10 நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு வா என தனது கணவர் சொன்னதால் மட்டும் தான் இந்த போட்டிக்கு வந்தேன் என்கிறார்.

முன்னாலேயே சொல்லியிருக்கலாம்

முன்னாலேயே சொல்லியிருக்கலாம்

நிரூப்பிடம் பேசுகையில், தனக்கு இந்த வெற்றி ரொம்ப மக்கியம். தான் வெற்றி பெற்றால் நாடக உலகமே மிகவும் சந்தோஷப்படும் என்கிறார். தாமரையின் இந்த பேச்சுக்களை கேட்டு விட்டு கடுப்பாகும் பிரியங்கா, உனக்கு ஜெயிக்க வேண்டாம் என முன்பே சொல்லி இருந்தால் நாங்கள் நிரூப்பிற்கு பதிலாக உனக்கு ஓட்டளித்து உன்னை வெளியேற்றி இருப்போமே என்கிறார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

இதே கேள்வியை கேட்டு நெட்டிசன்களும் தாமரையை கழுவி ஊற்றி வருகிறார்கள். வெற்றி வேண்டாம் என சொல்பவர் எதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும். முதல் சில வாரங்களிலேயே போயிருக்கலாமே. தாமரை ஓவராக நடிக்கிறார். பார்ட்டி என்றால் சிறு குழந்தைக்கு கூட தெரியும். இவர் ஒன்றுமே தெரியாது போல் பேசுவது நம்பும்படியாக இல்லை. கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாம என இன்னமும் எல்லோரும் நம்புவார்கள் என காட்ட நினைக்கிறாரா தாமரை என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X