எதற்கும் துணிந்தவன் பார்ட் 2 வருமா... அந்த இன்னொரு படம் இது தானோ?

சென்னை : சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் பார்ட் 2 வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு டைரக்டர் பாண்டிராஜ் என்ன பதில் சொல்ல போகிறார் என்பது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். பிரியங்கா அருள்மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொள்ளாச்சி சம்பவம் கதை

பொள்ளாச்சி சம்பவம் கதை

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றாமல் குடும்ப, பொழுதுபோக்கு படமாக இந்த படத்தை டைரக்டர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். அசத்தலான திரைக்கதை, சூர்யா உள்ளிட்டோரின் யதார்த்தமான நடிப்பு என அனைவரையும் கவர்ந்தது இந்த படம்.

ஓடிடி.,யிலும் ரிலீஸ்

ஓடிடி.,யிலும் ரிலீஸ்

ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது எதற்கும் துணிந்தவன். இந்த படம் 179 முதல் 200 கோடிகளை வசூல் செய்தது. தியேட்டர்களைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ம் தேதி ஓடிடி.,யிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. இது சூர்யா ரசிகர்களை இன்னும் உற்சாகமடைய வைத்துள்ளது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு பாலா உடனான படம், வெற்றிமாறனின் வாடிவாசல் என பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா.

பார்ட் 2 வரப் போகுதா

பார்ட் 2 வரப் போகுதா

எதற்கும் துணிந்தவன் படத்தில் கண்ணபிரான் என்ன கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். இந்த சமயத்தில் நேற்று ஓடிடி.,யில் எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தின் என்ட் கார்டில், Kannabiran will be back என்ற வசனத்தை பார்த்து விட்டு, எதற்கும் துணிந்தவன் பார்ட் 2 வருமா என கேட்டுள்ளனர். பார்ட் 2 எடுக்க போவதை தான் டைரக்டர் பாண்டிராஜ் இப்படி சூசகமாக சொல்லி இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.

இன்னொரு படம் இருக்கு

இன்னொரு படம் இருக்கு

சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் பேசிய பாண்டியராஜ், சூர்யா சாரிடம் நான் சொல்லி, ஓகே வாங்கிய கதை வேறு. ஆனால் அதற்கு முன் இப்படி ஒரு படம் எடுக்கலாம் என்ற பேச்சு வந்த போது, இந்த காலத்திற்கு தேவையான கதை இது. அதனால் எதற்கும் துணிந்தவன் படத்தை முதலில் படமாக்கிய பிறகு, முன்பு சொன்ன கதையை படமாக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறினார். விரைவில் வேட்டி கட்டிய சூர்யாவை மீண்டும் பார்க்கலாம். சூர்யா-பாண்டிராஜ் காம்போவில் மற்றொரு படம் வர போவதாக சூர்யா, பாண்டிராஜ் இருவருமே உறுதி செய்தனர்.

இன்னொரு படம் இதுதானா

இன்னொரு படம் இதுதானா

இதனால் சூர்யா-பாண்டிராஜ் மீண்டும் இணையும் படம் எதற்கும் துணிந்தவன் பார்ட் 2 தானா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகி ஒரு மாதம் ஆகும் நிலையில், தற்போது என்ட் கார்டை வைத்து இப்படி ஒரு கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X