»   »  தமிழ் சினிமா ஸ்ட்ரைக்... என்னதான் தீர்வு?

தமிழ் சினிமா ஸ்ட்ரைக்... என்னதான் தீர்வு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய 1046 திரைகள் இயங்கி வருகின்றன. 2000-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே பிலிம் ரோல்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொடக்க காலத்தில்க்யூப், UFO போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய புரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவின.

Is there any solution for Cinema Strike?

குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்கள் பலவும் கடந்த 17 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி கண்டுள்ளன.

குறிப்பாக ஒரே நிறுவனம் மட்டும் இந்தியா முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் தனது டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பிலிம் ரோல்களின் மூலம் படத்தைத் திரையிட்டபோது, எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறதோ அத்தனை பிரிண்டுகளை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால், தற்போதைய டிஜிட்டல் முறையில் ஹார்ட் டிஸ்க்கில் படம் சேமிக்கப்பட்டு திரையிடப்படுவதால் பிலிம் ரோல்களுக்கான செலவு தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு மிச்சமாகிறது.

ஆனால், பிலிம் ரோல் முறையே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த டிஜிட்டல் முறையில் தயாரிப்பாளர்களுக்கு செலவு அதிகரித்திருக்கிறது," என்கிறார் ஒரு தயாரிப்பாளர். இதுதான் பிரச்சனையின் மையம்.

இந்த டிஜிட்டல் முறையில் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அதை ஒரு வாரத்திற்கு தாங்கள் சொல்லும் தியேட்டரில் (48 காட்சிகள்) திரையிடுவதற்கு அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் திரைப்படம் எத்தனை வாரங்களுக்கு ஓடுகிறதோ, அத்தனை வாரங்களுக்கு கட்டணம் இருக்கும். ஆனால், சற்று குறைந்துகொண்டே வரும்.

இதற்குப் பதிலாக, 'லைஃப்' என்ற முறையில் படத்தைத் திரையிட்டால், அதாவது அந்த திரைப்படம் வெளியாகி, திரையரங்கில் இருந்து எடுக்கப்படும் வரை என்று ஒப்பந்தம் செய்துகொண்டால், 34 ஆயிரம் ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தற்போது பிரதானமாக உள்ள க்யூப் மற்றும் UFO நிறுவனங்கள் தங்கள் வாடகைத் தொகையைக் குறைக்க வேண்டுமென தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கியூப்,UFO உள்ளிட்ட தற்போதைய முன்னணி நிறுவனங்களுக்குப் பதிலாக, குறைவான கட்டணங்களில் படத்தை திரையிடய முன்வரும் புதிய நிறுவனத்தை அறிமுகப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முயன்றுவருகின்றன.

இந்தப் புதிய நிறுவனங்கள் 'லைப்' முறைக்கு 12 ஆயிரமும், வார முறை திரையிடலுக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் மட்டுமே வசூலிப்போம் என உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

இருந்தபோதும் ஏற்கனவே க்யூப், UFO போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே திரையரங்குகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தங்கள் புரொஜெக்டர்களை நிறுவி இருப்பதால் புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தங்களுடைய புரஜெக்டர்களை தற்போது நிறுவமுடியாத சூழல் உள்ளது.

இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், அந்த காலகட்டம் முடியும் வரை வேறு நிறுவனங்கள் தங்கள் புரொஜெக்டர்களை இந்தத் திரையரங்குகளில் நிறுவமுடியாது.

இது தவிர, திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பும் இடைவேளையின்போதும் திரையிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்புகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். தங்களுடைய திரைப்படங்கள் திரையிடப்படுவதால் மட்டுமே விளம்பரங்களை வெளியிட முடிவதால், அதன் வருவாயிலும் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத பங்கு தேவை என்கின்றனர் அவர்கள்.

ஆனால், இதற்கு டிஜிட்டல் நிறுவனங்களும் திரையரங்குகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
நவீன தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் அதற்கான கருவிகளையும் அல்லது புரொஜெக்டர்களையும் மாற்றும்போது புதிய ஒப்பந்தம் செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் கியூப் நிறுவனத்துடன் திரையரங்குகளின் குறுகிய காலஒப்பந்தமானது நீண்டுகொண்டே செல்கிறது."

ஒப்பந்தம் முடிவடைவதற்குள் வேறு நிறுவனங்களின் புரொஜெக்டர்களை திரையரங்குகள் பொருத்தினால், பழைய நிறுவனத்திற்கு நஷ்ட ஈடுகொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தயாரிப்பாளர்கள் சங்க முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இப்படி ஒவ்வொரு தரப்பும் தங்கள் பக்கத்து நியாயங்களில் பிடிவாதமாக இருந்து கொண்டு ஒன்று கூடி பேசி பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீட்டை நிறுத்தியும் மார்ச் 16 முதல் படப்பிடிப்புகளையும் நிறுத்தியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இப்பிரச்சினையில் திரைப்பட தொழில் சாராத மூன்றாம் நபர் அல்லது தமிழக அரசு நேரடியாக தலையிட்டால் மட்டுமே திரைப்பட தயாரிப்பாளர்களின் தொழில் முடக்கம் முடிவுக்கு வரும்.

English summary
Here is a solution for the ongoing Cinema Strike in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X