தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா... அதிரும் சோஷியல் மீடியா

சென்னை : தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றன.

Recommended Video

Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!

தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

கிசுகிசுவால் நடந்த திருமணம்

கிசுகிசுவால் நடந்த திருமணம்

யூட்யூப்பில் வழக்கம் போல் திரை பிரபலங்கள் பற்றி கிசுகிசு சொன்ன பல்வான் ரங்கநாதன், சமீபத்தில் தனுஷ் பற்றியும் கூறினார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ரஜினியே தன்னிடம் கூறியதாக கூறினார். அதோடு 16 வருடங்கள் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றதாக ஒரு "க்" வைத்து பேசினார். விருப்பம் இல்லாமல் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றதாக இதனால் பலர் பேசினர். இது கூட விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக இருந்த மனகசப்பு இன்று விரிசலாகி உள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்த நடிகை தான் காரணமா

இந்த நடிகை தான் காரணமா

ஆனால் இது காரணமல்ல. அவர்கள் இருவரும் திருமணமாகி 16 ஆண்டுகள் சந்தோஷமாக தான் வாழ்ந்ததாகவும், சமீபத்தில் தான் இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.

ரஜினி இளைய மகள் போட்ட ட்வீட்

ரஜினி இளைய மகள் போட்ட ட்வீட்


அதோடு சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி இருந்தார். ஏற்கனவே சிம்புவும், ரஜினியின் மகளும் காதலித்து வந்ததாக ஒரு வதந்தி பரவியது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு தான் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் நடைபெற்றதாகவும், ரஜினி மகளை திருமணம் செய்ய போகிறார் என்ற காரணத்தால் தான் ஆரம்பத்தில் சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது தான் தற்போதைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

 விவாகரத்திற்கு ரஜினி காரணமா

விவாகரத்திற்கு ரஜினி காரணமா

அதே சமயம் இவர்களின் விவாகரத்திற்கு மற்றொரு புதிய காரணமும் கூறப்படுகிறது. ரஜினியின் வற்புறுத்தலின் பேரில் தான் போயஸ் கார்டனில் தனுஷ், பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறாராம். இதனால் கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும், அந்த சமயத்தில் உதவால் ரஜினி கை விரித்து விட்டதாகவும், அதனால் மனவருத்தம் மற்றும் விரக்தியில் இருந்த தனுஷ், கடன் பிரச்சனையை சமாளிக்க ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையும் அவர்களின் விவாகரத்திற்கு காரணம் என கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X