அடிதூள்...இவங்க தான் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களா... அப்போ அனல் பறக்குமே
சென்னை : அக்டோபர் 3ம் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதியுடன் நிறைவடைந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த ஷோவின் டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றார். ரன்னர் அப்பை பிரியங்கா பெற்றார்.
டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. ராஜுவுக்கு ரசிகர்கள், முந்தைய பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள், சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் ரசிகர்களை மேலும் கவருவதற்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி வெர்சன் விரைவில் துவங்கப்பட உள்ளதாக பிக்பாஸ் ஃபினாலே மேடையிலேயே கமல் அறிவித்தார். அதோடு, பிக்பாஸ் அல்டிமேட் ஷோவிற்கான லோகோவும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார்.

எப்போது துவங்குகிறது
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஜனவரி 30ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாகவும், பிக்பாஸின் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற வெற்றியாளர்கள் தவிர்த்து மற்ற போட்டியாளர்களில் இருந்து பிக்பாஸ் அல்டிமேடிற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதிகரிக்கப்பட்ட போட்டியாளர்கள்
முதலில் 42 நாட்கள், 12 அல்லது 13 போட்டியாளர்கள் உடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றனர். ஆனால் தற்போது 75 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேடிற்கான முதல் ப்ரோமோ ஜனவரி 17ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கமல் பேசியதை வைத்து பார்க்கும் போது போட்டியாளர்கள் யார் என்பது ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

இவங்க தான் போட்டியாளர்களா
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் யார் என்ற விபரம் கசிந்துள்ளது. அதன்படி, வனிதா விஜயக்குமார், பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஓவியா, ஜுலி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்க போகிறார்களாம். இவர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் 3 பேரிடமும் பேசப்பட்டு வருகிறதாம்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இம்மாத இறுதியில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாம். வழக்கமான பிக்பாஸ் சீசன்களை போல வார இறுதி நாட்களில் கமல் வருவாராம். ப்ரோமோவே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளதால், நிஜமாகவே இந்த ஷோவும் அல்டிமேட்டாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











