twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படிக்கூட தலைவருக்கு போட்டியா?.. பிக் பாஸ் தலைவரானார் குயின்சி

    |

    பிக் பாஸ் தலைவராக போட்டியிட கடினமான போட்டிகளை சந்தித்த போட்டியாளர்கள் இந்த வாரம் கோலப்போட்டி மூலம் தலைவரானார்.

    மூன்று பேர் போட்டியிட்ட கோலப்போட்டியில் அதிக வாக்குகளை பெற்று குயின்சி தலைவரானார்.

    எந்த ஒரு வேலையும் செய்யாமல், எந்த தகுதியும் இல்லாத குயின்சி தலைவர் ஆகி உள்ளார்.

    பிக் பாஸ் வீட்டில் அசீம் கொடுத்த விளக்கம் சரியா தவறா...? மக்கள் பார்வையில் ஒரு அலசல்பிக் பாஸ் வீட்டில் அசீம் கொடுத்த விளக்கம் சரியா தவறா...? மக்கள் பார்வையில் ஒரு அலசல்

     இந்த வார தலைவர் தேர்வு

    இந்த வார தலைவர் தேர்வு

    பிக்பாஸ் சீசன் 6-ல் வித்தியாசமான பல நிகழ்வுகள் நடந்திருக்கு. அதில் இந்த வாரம் கேப்டன் போட்டியில் கோலம் போட்டு தலைவர் தேர்வு செய்யப்பட்டதும் ஒன்று. இதில் குயின்ஸி கோலம் நன்றாக இருந்ததால் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியது முதல் பலவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் இந்த வாரத்திற்கான தலைவராக குயின்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது நடந்துள்ளது.

     முதல் தலைவர் ஜி.பி.முத்து

    முதல் தலைவர் ஜி.பி.முத்து

    பிக் பாஸ் போட்டி மூன்றாவது வாரத்தில் எட்டியுள்ளது முதல் இரண்டு வாரங்களில் பரபரப்பான பல காட்சிகள் வழக்கம் போல் நடுநிலையாளர்களாக தங்கள் காட்டிக்கொள்ளும் சிலர் இதிலும் தப்பித்து வந்தனர். சிலர் நன்றாக வேலை செய்தாலும் அவர்கள் வேலை அங்கீகரிக்கப்படவில்லை. சிலர் குரூப்புகளுடன் ஒட்டிக்கொண்டு தங்களை பலப்படுத்திக் கொண்டதையும் காண முடிந்தது. பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வாரத்தில் தலைவர் தேர்வில் 1 3/4 மணி நேரத்திற்கு மேல் நின்று ஜி.பி.முத்து தலைவர் ஆனார். ஜி.பி.முத்து தலைவர் ஆன வாரத்தில் பெரிதாக அவர் ஆதிக்கம் செலுத்தவில்லை.

     அடுத்த தலைவர் போட்டியில் குயின்ஸி

    அடுத்த தலைவர் போட்டியில் குயின்ஸி

    ஜி.பி.முத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு ஹோம் சிக் வந்து தனது வீட்டுக்கு செல்லும் மனநிலையில் இருந்ததால் எதிலும் கவனம் செலுத்தாமல் காணப்பட்டார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் சாந்தி மகேஸ்வரி ஏடிகே மூவரும் இருந்தனர். நேற்று நடந்த எவிக்ஷனில் சாந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதால் அவர் போகும் பொழுது குயின்சியை அடுத்த தலைவர் போட்டிக்கு அறிவித்துவிட்டு சென்றார். நேற்று கமல்ஹாசன் சொன்ன சில அறிவுரைகள் காரணமாக போட்டியாளர்கள் அதை குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

     இப்படி ஒரு போட்டியா தலைவர் பதவிக்கு?

    இப்படி ஒரு போட்டியா தலைவர் பதவிக்கு?

    இன்று காலையில் புதிய தலைவருக்கான தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு இதுவரை இல்லாத அளவிற்கு கோலப்போட்டியாக நடத்தப்பட்டது. மூன்று போட்டியாளர்களும் அவர்கள் கொடுத்த கலர்பொடியை வைத்து கோலம் போடுவது, அதை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்து அதில் அதிக ஓட்டு பெரும் நபர் அடுத்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோலப்போட்டி நடந்ததில் மகேஸ்வரி, ஏடிகே வை விட அதிகமாக வாக்குகள் பெற்ற குயின்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட குயின்சி உடனடியாக 4 டீம்களை பிரித்து இந்த வாரத்திற்கான வேலைகளை ஒதுக்கினார்.

     பிக்பாஸ் வீட்டின் விநோதங்கள்

    பிக்பாஸ் வீட்டின் விநோதங்கள்

    பிக்பாஸ் பிக் பாஸ் வீட்டில் எப்போதும் பல வினோதங்கள் நடக்கும். அப்படிப்பட்ட வினோதங்களில் ஒன்றுதான் குயின்சி தலைவராவது. பிக் பாஸ் வீட்டில் நன்றாக செயல்படுபவர்கள் ஓரங்கட்டப்படுபவர்கள். அதற்கு உதாரணம் சாந்தி ஓரங்கட்டப்பட்டு நேற்று வெளியேற்றப்பட்டது ஆகும். சற்று அதிகம் நியாயம் பேசினால் அவர் முரட்டுத்தனமானவர் என்று ஓரம் கட்டப்படுவார். கோழையாக, சுயநலவாதிகளாக, கும்பல் சேர்ந்து கொண்டு குழு மனப்பான்மையில் இயங்குபவர்கள் தப்பித்து விடுவார்கள். தோற்ற பொலிவு உள்ளவர்கள் சில நேரம் போற்றப்படுவார்கள்.

     உஷார் பார்ட்டி குயின்ஸி

    உஷார் பார்ட்டி குயின்ஸி

    அந்த வகையில் குயின்சி எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் முன்னிற்காமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தவர் அவர் மீது எந்த விமர்சனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். குழுவாக இயங்கினார். அவர் தலைவருக்கான போட்டியில் முதலிலேயே போய் மூன்றாவது இடத்தில் நின்று கொண்டார் அவரிடத்திற்கான போட்டியும் இல்லை அதனால் எளிதாக தலைவர் போட்டியில் நுழைந்த அவர் கோலப்போட்டியின் மூலம் தலைவர் ஆகியுள்ளார். இது போன்ற வினோதங்கள் பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி நடக்கத்தான் செய்யும்.

    English summary
    The contestants faced tough competition to become the Bigg Boss leader this week and became the leader through a 'kolappotti'.In a three-man race, Quincy won the most votes. Quincy has become leader without doing any work and without any qualifications.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X