வலிமை ரிலீஸ் பிளான் இது தானா... அப்போ தியேட்டர் தெறிக்குமே
சென்னை : ஊரடங்கு ரத்தானதால் பிப்ரவரியில் தியேட்டரில் ரிலீசாக போகும் படங்களின் தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஜித்தின் வலிமை ரிலீஸ் பிளான் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான தகவல்களின் படி பார்த்தால் இது தான் கன்ஃபார்ம் தேதியாக இருக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ஆகியன ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் ரிலீசாகும் என கூறப்பட்ட படங்களுடன் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருந்து, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களும் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றன.

முதல் ஆளாக வரும் விஷால்
பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 18 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஜனவரி 14, ஜனவரி 26 என அறிவித்து அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டு வந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பிறகு தியேட்டரில் ரிலீசாகும் பெரிய நடிகரின் முதல் தமிழ் படம் இது தான்.

ஒரே சமயத்தில் இரு படங்களா
ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாதம் ரிலீஸ் என சொல்லி விட்டதால், அடுத்தபடியாக இருக்கும் பெரிய படமான அஜித்தின் வலிமை மற்றும் பிரபாசின் ராதே ஸ்யாம் படங்களின் ரிலீஸ் தான் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இவை இரண்டுக்குமே போனி கபூர் தான் தயாரிப்பாளர். அதனால் ஒரே சமயத்தில் வெளியிட பிளான் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தான் ரிலீஸ் தேதியா
லேட்டஸ்ட் தகவலின் படி, தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தால் பிப்ரவரி மத்தியில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. அதனால் பிப்ரவரி இறுதி வாரத்தில், அதாவது பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்டிற்கும் பொருத்தமாக இருப்பதால் பிப்ரவரி 24 ம் தேதி தான் வலிமை ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த கொண்டாட்டம்
அதே சமயம் மற்றொரு தகவலாக அடுத்த வாரம் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரியில் அஜித்தின் வலிமை, மார்ச்சில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் டிரெண்டிங்கா
வலிமை ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளிவர துவங்கி விட்டதால் மீண்டும் அஜித் ரசிகர்கள் #Valimai, #AK61 ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதோடு #AjithKumar ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











