என்னது...ஜென்டில்மேன் 2 ஹீரோ இவரா... அப்செட்டாக கழுவி ஊற்றும் ரசிகர்கள்

சென்னை : ஜென்டில்மேன் 2 படம் எடுக்க போவதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்ததும் எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்களோ, அந்த ஆர்வம் அடுத்தடுத்த அப்டேட்களால் தவிடு பொடியாகி போய் உள்ளது.

1993 ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் மூலம் தான் டைரக்டர் ஷங்கர் தமிழ் சினிமாவிற்குள் டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே செம ஹிட் ஆனதால் வெற்றி பட டைரக்டர், பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரும் ஷங்கருக்கு கிடைத்தது.

20 ஆண்டுகளுக்கு பின் பார்ட் 2

20 ஆண்டுகளுக்கு பின் பார்ட் 2

இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மதுபாலா, செந்தில், கவுண்டமணி, சரண்ராஜ், சுபஸ்ரீ, நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இந்த படத்தை, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக குஞ்சுமோன் சமீபத்தில் அறிவித்தார்.

 இசையமைப்பாளர் கீரவாணி

இசையமைப்பாளர் கீரவாணி

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். படத்தை அறிவித்த குஞ்சுமோன், ஹீரோ, டைரக்டர் என யாருடைய பெயரையும் அறிவிக்காமல், நேரடியாக இசையமைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி தான் ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்க போவதாக அறிவித்தார்.

 இப்படி ஏமாத்திட்டாரே

இப்படி ஏமாத்திட்டாரே

ஹீரோ யார், டைரக்டர் யார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத ட்விஸ்டாக நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியதால், ஹீரோ யாராக இருந்தால் சரியாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதாக, ஹீரோயின் நயன்தாரா தான். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாதாம். கேரள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி என அறிவித்தார் குஞ்சுமோன்.

என்னது ஹீரோ இவரா

என்னது ஹீரோ இவரா

அதோடு ஜென்டில்மேன் 2 படத்தில் 2 ஹீரோயின்கள். மற்றொரு நடிகை யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இதனால் இதில் ட்விஸ்ட் என்ற பெயரில் என்ன அதிர்ச்சி கொடுக்க போகிறாரோ என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், லேட்டஸ்ட் தகவலாக ஜென்டில்மேன் 2 படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.

ஃபிளாப்ன்னு தெரிஞ்சே எடுக்குறீங்களா

ஃபிளாப்ன்னு தெரிஞ்சே எடுக்குறீங்களா

இதனால் கடுப்பான ரசிகர்கள், 20 வருடங்களுக்கு முன் அந்த கேரக்டரில் அவர் நடித்தார் என்றால் ஓகே. ஆனால் தற்போது அவரை நடிக்க வைப்பது சரியாக இருக்குமா. ஃபிளாப் ஆக போகிறது என தெரிந்தே படத்தை எடுக்குறீங்களா. ஏன் கே.டி.குஞ்சுமோன் ட்விஸ்ட் என்ற பெயரில் இப்படி அனைத்தையும் சொதப்பி வைக்கிறார். ஹீரோ அர்ஜுனாக இருந்தால் நயன்தாரா சக்கரவர்த்திக்கு அவர் மகள் வயது இருக்கும். அவர் எப்படி ஹீரோயினாக பொறுத்தமாக இருப்பார் என கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X