செம ஹாட் அப்டேட்... சிம்புவுடன் ஜோடி சேர போகும் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா
சென்னை : வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தின் வேலைகளை முடித்து விட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு. முதலில், நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் தற்போது வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டுள்ளது.
Recommended Video
ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல் வரிகளை தாமரை எழுதுகிறார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும்.

கதையையும் மாத்திட்டாங்களா
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் உடனான ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தை சாஃப்ட்டான கிராமத்து, ரொமான்டிக் படமாக தான் இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். ஆனால் தற்போது இந்த கதையை சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக மாற்றினால் என்ன என பொறி தட்டியதாம்.

கிராமத்து த்ரில்லர் படம்
அதனால் வெந்து தணிந்தது காடு படத்தை த்ரில்லர் கலந்த கிராமத்து கதையாக உருவாக்கி வருகிறாராம். இதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் இருக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பாலா பட ஃபஸ்ட்லுக்கை தவறுதலாக கவுதம் மேனன் வெளியிட்டு விட்டாரோ என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

15 கிலோ குறைந்த சிம்பு
இது சிம்புவின் 47 வது படம். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் கிராமத்தில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் வித்தியாசமான ரோலுக்காக கிட்டதட்ட 15 கிலோ எடையை குறைந்துள்ளார் சிம்பு. கதை, டைட்டில் என அனைத்தையும் மாற்றி புத்தம் புதிதாக ஷுட்டிங்கை துவக்கி உள்ளனர். இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறாராம்.

திருச்செந்தூரில் ஷுட்டிங்
திருச்செந்தூரில் முருகன் அருளுடன் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங்கை துவக்கி உள்ளனர். இந்த படத்தில் சிம்புவுடன் மிக முக்கியமான கேரக்டரில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறாராம். தற்போது நடக்கும் ஷுட்டிங்கில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

கவுதம் மேனன் அதிரடி திட்டம்
திருச்செந்தூரில் ஷுட்டிங்கை முடித்த பிறகு அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளனராம். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக வெளிநாடும் செல்ல உள்ளனராம். வெந்து தணிந்தது காடு படத்தை மூன்று அல்லது நான்கு மாதங்களில் எடுத்து முடிக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.

இவர் தாம் ஹீரோயினா
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர போகும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கயடு லோஹரிடம் பேசப்பட்டு வருகிறதாம். இவர் மராத்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் ஏற்கனவே நடித்து பிரபலமானவர்.


Click it and Unblock the Notifications











