அதிதி 10 ம் வகுப்பில் வாங்கி மார்க் இதுவா?...செம தகவலாக இருக்கே

சென்னை : டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.தனது க்யூட்டான நடிப்பு, அசத்தலான டான்ஸ் திறமையால் முதல் படத்திலியே அனைவரையும் கவர்ந்து விட்டார்.

Recommended Video

Open-னா பதில் சொன்ன Adithi Shankar... இப்படி பேசினா பொழச்சிப்பம்மா! *Kollywood

'விருமன்' பட ரிலீசிற்கு முன்பே அதிதி தனது குறும்புத்தனமான செய்கைகள், பேட்டிகளில் யதார்த்தமான கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். விருமன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணியில் அம்சமாய் வந்து அனைவரையும் கவர்ந்தார்.

அதற்கு பிறகு விருமன் ப்ரமோஷனுக்காக அதிதி அளித்த பேட்டி ஒவ்வொன்றும் செம வைரலானது. விருமன் ஆடியோ விழாவில், சூர்யா வந்ததும் ரசிகர்களுடன் சேர்ந்து இவர் ரோலக்ஸ்...ரோலக்ஸ் என கத்திய வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கியதுடன் அதிதியை டிரெண்டிங் ஆக்கி கொண்டாடினர்.

அதிகரிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை

அதிகரிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை

அதிதியின் ஒவ்வொரு செயலும் ரசிகர்களை ரசனைக்கு உள்ளாக்கி வருவதால், இளைஞர்களின் ஃபேவரைட் நடிகையாகி விட்டதால் சோஷியல் மீடியாவில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. அதிதி பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிதி சொன்ன ஜோக்

அதிதி சொன்ன ஜோக்

இந்நிலையில் விருமன் ப்ரொமோஷனுக்காக படக்குழுவினர் மதுரை சென்றுள்ளனர். ரிலீசிற்கு பிறகு ரசிகர்கைள காண வந்த படக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்காக அதிதி ஜோக் ஒன்றை சொல்லி உள்ளார். சண்டே அன்னிக்கு சண்டைய போடலாம். ஆனா மன்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா? என அவர் சொல்லி உள்ளார்.

அதிதியின் 10 ம் வகுப்பு மார்க் இதுவா?

அதிதியின் 10 ம் வகுப்பு மார்க் இதுவா?

அதிதி பற்றிய பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் 10ம் வகுப்பு மார்க் விபரங்களை ரசிகர்கள் சிலர் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். அதில் சயின்ஸ் - 99, கணிதம் - 97, பிரெஞ்ச் - 97, சோஷியல் ஸ்டடீஸ் - 91, ஆங்கிலம் - 91 என குறிப்பிடப்பட்டுள்ளது. விருமன் படம் ரிலீசாவதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு தான் அதிதி, மருத்துவ படிப்பை முடித்து பட்டம் வாங்கினார்.

எல்லாத்தையும் டிரெண்ட் ஆக்குகிறார்கள்

எல்லாத்தையும் டிரெண்ட் ஆக்குகிறார்கள்

அதிதி சொன்ன ஜோக் வீடியோ, அவர் 10 ம் வகுப்பில் வாங்கிய மார்க் போன்ற தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே அதிதியின் பேட்டி, டான்ஸ், பாட்டு என ஒவ்வொரு வீடியோவையும் தேடிப்பிடித்து டிரெண்ட் ஆக்கி வரும் ரசிகர்கள் இதை மட்டும் சும்மாவா விடுவார்கள்.

 குவியும் பட வாய்ப்புகள்

குவியும் பட வாய்ப்புகள்

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்' படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படம் உட்பட பல படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X