அடுத்த வாத்தி கம்மிங்...தமிழ் சினிமாவின் அடுத்த வாத்தி யார் தெரியுமா?

சென்னை : மாஸ்டர் படத்தில் விஜய், அதற்கு பிறகு வாத்தி படத்தில் தனுஷ் ஆகியோர் காலேஜ் ப்ரொஃபசர் ரோல்களில் நடித்து அசத்தினர். தற்போது அடுத்த மாஸ் ஹீரோ ஒருவரும் காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்க போகிறாராம்.

மாஸ்டர் படத்தில் விஜய், காலேஜ் ப்ரொஃபசராக நடித்திருந்தார். காலேஜ் ப்ரஃபசரான விஜய், சீர்திருத்த பள்ளியில் நடக்கும் ரெளடிசம், அதனால் அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்படுவது போன்றவற்றை கண்டுபிடித்து, சரி செய்யும் ரோலில் நடித்திருந்தார். விஜய்யின் மாஸ் என்ட்ரிக்காக மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் வைக்கப்பட்டது.

வாத்தியாக தனுஷ்

வாத்தியாக தனுஷ்

விஜய்யை தொடர்ந்து தனுஷும் தான் நடிக்கும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தில் காலேஜ் ப்ரொஃபசராக நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

 இவரும் வாத்தி ரோலிலா

இவரும் வாத்தி ரோலிலா

விஜய், தனுஷை தொடர்ந்து தற்போது அஜித்தும் காலேஜ் ப்ரொஃபஷர் ரோலில் நடிக்கிறாராம். அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 படத்தில் தான் அவர் ப்ரொஃபசராக நடிக்கிறாராம். காலேஜ் ஸ்டூடண்டாக கவின் நடிக்கிறாராம். ஏகே 61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ளதாம். அன்றே முதல் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி என்ன தான்ப்பா கதை

அப்படி என்ன தான்ப்பா கதை

ஏகே 61 படத்தில் ஹீரோ-வில்லன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என சொல்லப்பட்டு வரும் நிலையில் காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் அஜித் நடிக்கிறார் என்பது புதிய ட்விஸ்டாக உள்ளது. படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

 அசர வைக்கும் அப்டேட்கள்

அசர வைக்கும் அப்டேட்கள்

இதற்கிடையில் ஏகே 61 லுக்கில் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள், ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையத்தில் பரவி செம டிரெண்டிங் ஆகி வருகிறது. வலிமை படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த படத்தை டைரக்டர் ஹெச்.வினோத் உருவாக்கி உள்ளதாகவும், வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தில் மிக குறைந்த அளவிலான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இருக்கும் என கூறப்படுவதால் ஏகே 61 பற்றிய எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X