Don't Miss!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஜமெளலி படத்தில் கமலா...இது நம்ம லிஸ்டிலயே இல்லையே...வேற லெவல் மாஸ்
சென்னை : நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கமலை அடுத்து இயக்க போகும் டைரக்டர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் யாரும் எதிர்பாராத மாஸ் டைரக்டர் தான் கமலை அடுத்து இயக்க போகிறாராம்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் கமல் எழுதி, பாடிய ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியன ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கமல் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
பான்
இந்தியன்
படமாம்...கமல்
சார்,
அந்த
படத்தை
ரிலீஸ்
பண்ணுங்க...சிம்பு
எதை
சொல்றாரு?

நீளும் டைரக்டர்கள் லிஸ்ட்
சமீபத்தில் நடைபெற்ற விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில், கமலை வைத்து விருமாண்டி ஸ்டைலில் மதுரை கதைக்களத்தில் ஒரு படம் எடுக்க உள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், ரத்னகுமாரிடமும் ஒரு கதை கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் வெற்றிமாறன், மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் என பலரும் கமலை இயக்க போகும் டைரக்டர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

என்னது கமலை இவர் இயக்க போகிறாரா
இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக, இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக கொண்டாடப்படும் எஸ்.எஸ்.ராஜமெளலி, தான் இயக்க போகும் அடுத்த படத்தில் ஒரு பவர்ஃபுல்லான ரோலில் நடிக்க வேண்டும் என கமலிடம் கேட்டுள்ளாராம். ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

மகேஷ்பாபு படத்தில் கமலா
மகேஷ்பாபுவை வைத்து இயக்க போகும் இந்த படத்தின் மற்றொரு லீட் ரோலில் கமல் நடிக்க வேண்டும் என ராஜமெளலி கேட்டுள்ளாராம். இந்த படத்தில் ஒன்று இளம் ஹீரோ, மற்றொன்று வயதான ஹீரோ கேரக்டர் ரோல் உள்ளதாம். அந்த வயதான ஹீரோ ரோலில் நடிக்க கமல் தான், ராஜமெளலியின் முதல் தேர்வாக இருந்ததாம். கமல் - ராஜமெளலி படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாம். ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தில் நடிப்பது பற்றி கமல் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்யைாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.
Recommended Video

வேற லெவல் மாஸா இருக்குமே
கமல் படம், ராஜமெளலி படம் என்றாலே எதிர்பார்ப்பு எகிறும். இதில் இருவரும் இணையும் படம் என்றால் மாசுக்கும் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கும் சொல்லவா வேண்டும். தனது படத்தில் நடிக்க ராஜமெளலி, கமலிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானதும் ரசிகர்கள் சந்தோஷம் கலந்த ஆச்சரியத்தில் உள்ளனர். இதற்கு கமல் ஓகே சொல்வாரா என்பது தான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும், ஓகே சொல்லி விட்டால் வார்த்தையால் சொல்ல முடியாத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் இருக்கும் என விருப்பமாகவும் உள்ளது.