தலைவர் 169...பியூட்டி அப்டேட்...ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவரா?
சென்னை : அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு படு சுறுசுறுப்பாக அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி வருகிறார் ரஜினி. சென்னை வந்த கையோடு, அரசியலுக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டு, ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சென்னையில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதிக் கட்ட ஷுட்டிங்கிற்காக அண்ணாத்த டீம் வரைவில் கொல்கத்தா செல்ல உள்ளது.

இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த
அடுத்த வாரத்துடன் அண்ணாத்த படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவு செய்யப்பட உள்ளது. அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற உள்ளது. அண்ணாத்த தீபாவளி ரிலீசாக நவம்பர் 4 ம் தேதி தியேட்டரில் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 169 அப்டேட் வந்தாச்சு
இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்ணாத்த படத்தை தொடர்ந்து, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க போகிறாராம். இதற்கான ஒப்பந்தத்தில் ரஜினி கையெழுத்தும் போட்டு விட்டாராம்.

இவர் தான் ஹீரோயினா
தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் பியூட்டி குவீ ன் தீபிகா படுகோனுடன் பேசப்பட்டு வருகிறதாம். தீபிகா ஏற்கனவே ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கைவிடப்பட்ட ராணா
ஆனால் கோச்சடையான் படம் மோஷன் கேப்சர் படமாக தான் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ராணா படத்தில் நடிக்கவும் தீபிகா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது.
Recommended Video

ஓகே சொல்வாரா பாலிவுட் பியூட்டி
தற்போது தலைவர் 169 ல் நடிக்க தீபிகா ஓகே சொல்லி விட்டால், ரஜினியுடன் தீபிகா டூயட் பாடுவதை ரசிகர்கள் திரையில் பார்க்க முடியும். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். தீபிகா தற்போது ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











