Don't Miss!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- News
சர்வதேச கேன்சர் தினம்.. புற்றுநோய் குறித்த "இந்த" வதந்திகளை நம்பாதீங்க! மருத்துவர்கள் விளக்கம்
- Technology
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிம்பு ஹோஸ்ட்...இவர் ஸ்பெஷல் கெஸ்ட்டா...அப்போ பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே வேற லெவல் தான்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் என யாரும் வரவில்லை என நேற்று வரை கூறப்பட்ட நிலையில், லேட்டஸ்டாக சினிமா பிரபலம் ஒருவர் வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிம்பு என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.
ஹாட்ஸ்டாரில் ஓடிடி வெர்சனாக ஜனவரி 31 ம் தேதி முதல் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இதனால் டைட்டிலை வெல்ல போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
கேமராவுக்காக
கமல்
பேசினார்...சிம்பு
அக்கறையுடன்
அழைத்து
பேசினார்...நித்யா
பாய்ச்சல்

டைட்டில் வெல்ல போவது யார்
14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட்டில், சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்தார்கள். இவர்களில் தற்போது நிரூப், பாலா, ரம்யா பாண்டியன் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இந்த மூன்று பேரில் பிக்பாஸ் அல்டிமேட் தமிழ் முதல் சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.

எப்போ தெரியும்
ஏப்ரல் 10 ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே நேரடி நிகழ்ச்சியாக ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவிற்கான ஷுட்டிங் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளதாம். இதனால் டை்டிலை வென்றவர் யார் என்ற விபரம் நாளை தான் தெரிய வரும்.

இவர் ஸ்பெஷல் கெஸ்ட்டா
முதலில் ஃபினாலேவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் யாரும் வரவில்லை. ஏற்கனவே வெளியேறி சென்ற போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸின் முந்தைய ஐந்து சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலாக, நடிகை ஹன்சிகா ஸ்பெஷல் கெஸ்டாக கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

இதே வேலையா தான் இருக்காங்களா
ஏற்கனவே சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவி வந்தன. விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் லவ் திடீரென பிரேக்அப் ஆனதாகவும், அதற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாகி விட்டதாகவும் கூறப்பட்டது. முன்னாள் காதலர்களான நிரூப் மற்றும் அபிராமியை போட்டியாளர்களாக தேர்வு செய்து கடைசி வரை பிக்பாஸ் அல்டிமேட்டில் பரபரப்பாக கொண்டு சென்ற பிக்பாஸ் டீம், ஃபைனலிலும் அதே போன்று முன்னாள் காதலர்களான சிம்பு - ஹன்சிகாவை சந்திக்க வைத்து டிஆர்பி.,யை எகிற வைக்க போகிறார்கள்.

சிம்பு என்ன செய்வார்
இதில் ஹன்சிகாவை பார்த்தவும் சிம்புவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். ஹன்சிகா என்ன சொல்ல போகிறார் என்பதை பார்க்க பலர் ஆவலாக காத்திருக்கிறார்கள். அதே சமயம் ஹன்சிகா ஸ்பெஷல் கெஸ்டாக வருவது இதுவரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.