பிக்பாஸ் தமிழ் சீசன் 5... 12 வது போட்டியாளர் இவர் தானா ?

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக துவங்க உள்ளது. இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய பேச்சு தான் சோஷியல் மீடியாவில் உலாவிக் கொண்டிருக்கிறது.

Is this celebrity to enter as 12 th contestant in bigg boss tamil 5

காலை முதலே வரிசையாக போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. மாடலிங், பாடகர்கள், சின்னத்திரை, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்த சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss 5 Confirmed Contestant List | Kamal Hassan, BB 5 Grand Launch

லேட்டஸ்ட் தகவலின் படி, நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட இமான் அண்ணாச்சியும் பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில் 12 வது போட்டியாளராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நமீதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா, மதுமிதா, ராஜு ஜெயமோகன், கானா இசைவாணி, விஜய் டிவி தொகுப்பாளர் விஜே பிரியங்கா, நடிகர் அபினய் வட்டி, நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு, சின்னத்திரை நடிகையும் மாடலுமான பவானி ரெட்டி, மலேசிய மாடல் நதியா சாங், நடிகர் வருண் ஆகியோரின் பெயர்கள் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இமான் அண்ணாச்சியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் சிங்கம் 3, புலி, களவாணி 2, கதகளி, காக்கி சட்டை, பூஜை, மெட்ராஸ், கோலி சோடா, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சன் டிவி.,யில் குட்டீஸ் சுட்டீஸ் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியை நெல்லை தமிழில் தொகுத்து வழங்கி அனைவரிடமும் பிரபலமானார்.

சன் டிவி, கலைஞர் டிவி, கலர்ஸ் டிவி, மக்கள் டிவி உள்ளிட்ட டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இமான் அண்ணாச்சி, 2016 ல் திமுக.,வில் இணைந்ததன் மூலம் அரசியலிலும் ஈடுபட்டார். பிறகு சினிமா வாய்ப்புகள் வந்ததால் பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

போட்டியாளர்களின் பெயர்கள், அவர்களை பற்றிய விபரங்கள் வெளியாக துவங்கியதும் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது. இன்னும் யாரெல்லாம் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள், இன்று எத்தனை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X