Don't Miss!
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023
- News
டிராபிக்கால் திக்கு முக்காடும் தி.நகர்.. இனி கவலை வேண்டாம்! இணைக்கப்படும் மேம்பாலம்.. செம பிளான்
- Lifestyle
இந்த உணவுகளில் ஒன்றை காலையிலேயே சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்குமாம்!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Automobiles
காத்தையே கிழிக்க போகுது நம்ம வந்தே பாரத் ரயில்கள்... இனி ஒக்காந்துட்டு மட்டுமல்ல படுத்துட்டு போகலாம்..
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக ரசிகர்களை கொண்டது பிக்பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் அதிக எதிர்பார்ப்புக்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
8
வயசு..
அப்பா
இறந்துட்டாருன்னு
தெரியாம
எழுப்பினேன்..
அவருதான்
என்
ஹீரோ..
கண்ணீர்
விட்ட
அக்ஷரா!
கடந்த நான்கு சீசன்களை போல் இந்த சீசனிலும் சினிமா பிரபலங்களே அதிகம் இருப்பார்கள் என கணக்கு போட்டு, சினிமா பிரபலங்கள் பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்கள் பல சோஷியல் மீடியாக்களில் வலம் வந்தன. ஆனால் பிக்பாஸ் டீம் தங்களுக்கே உரிய தனி ஸ்டைலில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அறிமுகம் இல்லாத பல புதிய முகங்களை போட்டியாளர்களாக அறிவித்தனர்.

3 பேர் வெளியேற்றம்
பாடகர், நடிகர், நாட்டுப்புற கலைஞர், மாடல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இவர்களில் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் திருநங்கையான நமீதா மாரிமுத்து. அவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் நாமினேட் ஆகி வெளியேறினார் நாடியா சாங். இவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா வெளியேறினார்.

போட்டியாளர்கள் சம்பளம்
இந்நிலையில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம், அதிக சமபளம் பெறுபவர் போன்ற விபரங்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக போட்டியாளர்களுக்கு அவர்கள் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கு கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு தகவல் உண்டு.

அதிக சம்பளம் யாருக்கு
ஆனால் நாள் கணக்கிற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லையாம். ஒரு வாரத்திற்கு இவ்வளவு என சம்பளம் பேசப்பட்டு தான் போட்டியாளர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவர்களில் அதிக சம்பளம் யாருக்கு என வெளியாகி உள்ள விபரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் சம்பளம் பற்றிய பட்டியல் இதோ.

சம்பள விபர லிஸ்ட்
இசைவாணி - ரூ. 1 லட்சம்
ராஜு ஜெயமோகன் - ரூ.1.5 லட்சம்
மதுமிதா - ரூ.2.5 லட்சம்
அபிஷேக் ராஜா - ரூ.1.75 லட்சம்
நமிதா மாரிமுத்து - ரூ.1.75 லட்சம்
பிரியங்கா தேஷ் பாண்டே - ரூ.2 லட்சம்
அபினய் - ரூ.2.75 லட்சம்
பாவனி ரெட்டி - ரூ.1.25 லட்சம்
சின்ன பொண்ணு - ரூ.1.5 லட்சம்
நாடியா சாங் - ரூ.2 லட்சம்
வருண் - ரூ.1.25 லட்சம்
இமான் அண்ணாச்சி - ரூ.1.75 லட்சம்
அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
சுருதி - ரூ.70,000
ஐக்கி பெர்ரி - ரூ.70,000
தாமரைச் செல்வி - ரூ.70,000
சிபி - ரூ.70,000
நிரூப் - ரூ.70,000
அதே சமயம் இந்த சம்பள விபரம் எவ்வளவு சரி என தெரியவில்லை. இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், லேட்டஸ்ட் தகவல்கள் இந்த சம்பள விபரத்தை இணையத்தில் கசிய விட்டுள்ளன.