பீஸ்ட் ஆடியோ வெளியீடு...வெளியான அசத்தல் தகவல்...ஆனால் ரசிகர்களுக்கு இதுதான் வேணுமாம்

சென்னை : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போ, எங்கு நடக்க போகிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் குஷியான விஜய் ரசிகர்கள் மிக முக்கியமான விஷயத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் டைட்டிலுடன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டன.

ஸ்டிராங்காக குத்திய அரபிக்குத்து

ஸ்டிராங்காக குத்திய அரபிக்குத்து

அதற்கு பிறகு பீஸ்ட் படம் பற்றிய அப்டேட் ஏதும் வெளியாகாததால் ரசிகர்கள் செம கடுப்பாகினர். ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காதலர் தின ஸ்பெஷலாக அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடல் யூட்யூப்பில் மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது. இதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் 200 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையை நெருங்க உள்ளது.

யாரையும் விட்டு வைக்கல

யாரையும் விட்டு வைக்கல

உலகிலேயே மிக குறுகிய நாட்களில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களை மட்டுமல்ல பிரபலங்கள் அனைவரையும் இந்த பாடல் கவர்ந்துள்ளது. அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி, வீடியோ வெளியிடாத பிரபலமே இல்லை என சொல்லும் அளவிற்கு டைரக்டர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு விட்டனர்.

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ரிலீஸ் எப்போ

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியிடப்படும், ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த அப்டேட்டாக படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய அப்டேட் போஸ்டர் அல்லது வீடியோ உடன் வெளியிடப்பட உள்ளதாம். இதில் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்குமாம்.

பீஸ்ட் ஆடியோ எப்போது

பீஸ்ட் ஆடியோ எப்போது

மற்றொரு லேட்டஸ்ட் அப்டேட்டாக பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20 ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளதாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். இந்த ஆடியோ வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இந்த தகவல் கசிந்த உடனேயே #BeastAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு இது தான் வேணுமாம்

ரசிகர்களுக்கு இது தான் வேணுமாம்

பீஸ்ட் ஆடியோ வெளியீட்டை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது, அந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை தானாம். மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில், கடும்பேத்துறவன் கிட்ட கம்முன்னும், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என விஜய் பேசிய வசனம் செம பாப்புலர் ஆச்சு. பல விஷயங்கள் அரசியல் பஞ்ச் டயலாக்காக பார்க்கப்பட்டன. அப்படி பீஸ்ட் ஆடியோ விழாவில், என் நெஞ்சில் குடியிருக்கும் என துவங்கி விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்த்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X