தனுஷின் அடுத்த பட டைட்டில் இது தானா...என்னங்க இப்படி ஒரு டைட்டில் ?
சென்னை : மூன்று படங்கள் கையில் இருக்கும் போது நான்காவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார் தனுஷ். இந்த படத்தின் டைட்டில் பற்றிய விபரம் வெளியாகி உள்ளதால், என்னங்க இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்காங்க என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, படுதோல்வியை சந்தித்துள்ளன. கலாட்டா கல்யாணம் படத்தை தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் மாறன் படமும் படு ஃபிளாப் ஆனது. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

வரிசையாக படங்கள் ரெடி
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

2 வருஷமா வெயிட்டிங்
இந்நிலையில் ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய இளம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. அருண் மாதேஸ்வரன் தனது முதல் படமான ராக்கி படத்தை இயக்குவதற்கு முன்பு, 2020 ம் ஆண்டே தனது படத்திற்கு கதை கேட்டு ஓகே சொல்லி விட்டாராம் தனுஷ். இந்த படத்தில் தற்போது நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் தனுஷ்.

என்னப்பா இப்படி ஒரு டைட்டில்
தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். இந்த படம் 1930 களில் நடப்பதை போன்ற கதையாம். வரலாற்று ஆக்ஷன் அட்வன்சர் படமாக தயாராக உள்ள இந்த படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளார்களாம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் தொடாத ஒரு கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

அப்போ இதுதான் கதையா
சாணி காயிதம் படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனை இயக்கிய டைரக்டர் அருண் மாதேஸ்வரன், தற்போது தனுஷை இயக்க போகிறார். கேப்டன் மில்லர் படத்திற்காக 1930 களைப் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளதாம். படத்தின் ஷுட்டிங், மற்ற நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்திருப்பதால் கண்டிப்பாக இது முப்படைகள் சார்ந்த படமாகவும், அதில் பணியாற்றும் கேப்டனாக தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











