தளபதி 68 டைரக்டர் இவரா...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

சென்னை : விஜய்யின் தளபதி 67 படத்தின் டைரக்டர் யார் என்பதே இதுவரை உறுதியாகாத நிலையில், தளபதி 68 படத்தின் டைரக்டர் யார் என்பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாப் டைரக்டர்கள் பலரின் பெயர்களும் இதற்காக கூறப்பட்டு வருகிறது.

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதம் வரை நடக்கும் என கூறப்படுகிறது.

தள்ளிப் போகும் தளபதி 66

தள்ளிப் போகும் தளபதி 66

தளபதி 66 படம் முதலில் 2022 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உளளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இருந்தாலும் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் தளபதி 67 படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக தகவல் பரவி வருகிறது.

தளபதி 67 அறிவிப்பு வருமா

தளபதி 67 அறிவிப்பு வருமா

லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து இயக்கி உள்ள விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. இதில் தளபதி 67 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே அறிவிக்கப்பட்டாலும் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் முடிந்த பிறகே, தளபதி 67 வேலைகள் துவங்கப்படும்.

இவர் தான் தளபதி 68 டைரக்டரா

இவர் தான் தளபதி 68 டைரக்டரா

இந்நிலையில் தளபதி 68 படம் பற்றிய தகவல்களும் வெளி வர துவங்கி விட்டன. லேட்டஸ்ட் தகவலின் படி தளபதி 68 படத்தை டைரக்டர் அட்லி தான் இயக்க போகிறாராம். இந்த படத்திற்காக வித்தியாசமான கதை ஒன்றை உருவாக்கி, விஜய்யிடம் சொல்லி அட்லி ஓகே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் இவ்வளவு இருக்கா

இன்னும் இவ்வளவு இருக்கா

அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு தளபதி 68 படத்தின் வேலைகளை துவக்க போகிறாராம்.அதற்குள் விஜய்யும் வம்சி இயக்கும் தளபதி 66 மற்றும் லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படங்களை முடிக்க உள்ளாராம். ஆனால் தளபதி 68 பற்றிய தகவல்கள் இன்னும் இறுதி செய்யப்படவி்லலையாம். அட்லி ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். இது விஜய் - அட்லி இணையும் நான்காவது படமாகும்.

யாரு தான் தளபதி 68 டைரக்டர்

யாரு தான் தளபதி 68 டைரக்டர்

அதே சமயம் மற்றொரு தகவலாக, விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறாராம். அது தளபதி 68 படமா என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்க பிளான் செய்து வருவதாக ஒரு தகவலும் பரவி வருகிறது. ஆனால் தளபதி 68 படத்தை அட்லி இயக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X