twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது உங்களுக்கு ஜோக்கா... மீடியாக்களை லெஃப்ட் அண்ட் ரைட் விட்ட வெங்கட் பிரபு

    |

    சென்னை : டைரக்டரும், நடிகருமான வெங்கட் பிரபு இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில் மீடியாக்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார். எதற்காக திடீரென இவர் இப்படி ஒரு கோபமான பதிவை வெளியிட்டுள்ளார் என பலரும் ஷாக்காகி உள்ளனர்.

    சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மன்மதலீலை என்ற ரொமான்டிக் படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்து வரும் வெங்கட் பிரபு, ஆஸ்கார் விழா பற்றி தான் கோபமாக ட்வீட் போட்டுள்ளார்.

    50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம் 50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம்

    ஆஸ்காரில் நடந்த பரபரப்பு

    ஆஸ்காரில் நடந்த பரபரப்பு

    ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து முகத்தில் ஓங்கி குத்தினார். பிறகு அவரை எச்சரித்து விட்டும் சென்றார். ஸ்மித்தின் மனைவியின் உருவம் பற்றி பேசியதற்காக தான் கிரிசை, ஸ்மித் தாக்கி உள்ளார். இந்த செய்தியை வெளியிட்ட பல மீடியாக்கள், கிரிஸ் ராக், மேடையில் விளையாட்டாக ஸ்மித்தின் மனைவி பார்ப்பதற்கு GI Jane 2 போல இருப்பதாக கூறியதாக குறிப்பிட்டிருந்தன.

    ஸ்மித் கோபப்பட்டது ஏன்

    ஸ்மித் கோபப்பட்டது ஏன்

    ஆனால் உண்மையில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித், 2018 ம் ஆண்டு முதல் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடிகளை இழந்துள்ளார். இதை வெளிப்படையாக அறிவித்த ஜடா, நோயின் தீவிரத்தால் முடிகளை இழந்து மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். தற்போது வரை மொட்டை தலை தோற்றத்துடன் தான் இருக்கிறார். இதனை கேலி செய்வதை போல் கிரிஸ் பேசியதாலேயே, கோபத்தில் ஸ்மித் அவரை தாக்கி உள்ளார்.

    இது உங்களுக்கு ஜோக்கா

    இது உங்களுக்கு ஜோக்கா

    இந்த செய்தியை பார்த்த டைரக்டர் வெங்கட் பிரபு, இது வேடிக்கையான, ஜோக்கிற்கான விஷயமா. ஆஸ்கார் விழாவில் ஸ்மித்தின் மனைவிக்கு கண்டறியப்பட்ட நோய் பற்றி பேசுவது விளையாட்டா. ஆஸ்கார் விழாவில் அது பற்றி பேசுவது நன்றாக இருக்கிறது என நினைக்கிறீர்களா என மிக கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    யார் செய்தது சரி

    யார் செய்தது சரி

    வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டை வைத்து நெட்டிசன்கள் பெரிய விவாதமே நடத்தி வருகிறார்கள். சிலர் ஸ்மித்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர் செய்தது சரி என கூறி வருகின்றனர். அதே சமயம், என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்காக ஆஸ்கார் விழாவில், அதுவும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கையில் ஸ்மித் மேடைக்கு வந்து இவ்வாறு செய்திருக்க கூடாது என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

    English summary
    Venkat Prabhu questioned medias who covered Will Smith-Chris Rock incident in Oscar awards 2022 event. He asked if this was a funny joke. Netizens discussed seriously who did right and who did wrong on this issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X