பிக்பாஸில் இன்று இது தான் நடக்க போகிறது...வெளியான அசத்தல் தகவல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 97 நாட்களை கடந்து விட்டது. இதுவரை அமீர், நிரூப், ராஜு ஆகியோர் ஏற்கனவே ஃபைனலுக்கு சென்று விட்டார்கள். அடுத்ததாக ஃபைனலுக்கு செல்ல போவது யார், வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
இந்நிலையில் பிக்பாசில் 98 வது நாளான இன்றைய ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

டாப் 5 ஃபைனலிஸ்ட் இவங்க தான்
பிக்பாசில் இன்று பிரியங்கா ஃபைனலிஸ்டாக அறிவிக்கப்பட உள்ளது முதல் ப்ரோமோவிலேயே காட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாமரை இன்று வெளியேற்றப்பட உள்ளார். ஐந்தாவது ஃபைனலிஸ்டாக பாவனி இறுதிப் போட்டிக்குள் செல்ல உள்ளார். அமீர், பாவனி, நிரூப், ராஜு, பிரியங்கா ஆகிய 5 பேரும் இறுதிப் போட்டிக்கு செல்கிறார்கள்.

இன்று இது தான் நடக்க போகிறதா
இதைத் தொடர்ந்து ஏற்கனவே எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள், வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் போன் செய்து பேச உள்ளனராம். ஃபைனலுக்கு சென்றவர்கள் பற்றி வெளியேறி சென்றவர்கள் பேசும் நிகழ்வு நடைபெற உள்ளதாம். இதனால் எந்த போட்டியாளருக்கு யார் போன் செய்து பேச போகிறார், என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருந்தினர்கள் வருவார்களே
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் துவங்குவதற்கு முன்பே, வெளியேறி சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கும் சில ஜாலியான போட்டிகள் நடத்தப்பட்டு, வீடே கலகலவென்று இருக்கும். வெளியே சென்றவர்கள் உள்ளே வந்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு ஃபைனலுக்கு செல்வதற்கு சில டிப்ஸ் கொடுப்பார்கள்.

இந்த சீசனில் இது கிடையாதா
டென்ஷனில் இருக்கும் இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இப்படி வெளியே சென்றவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு கருதி, வெளியே சென்றவர்கள் இதுவரை அழைக்கப்படவில்லை. ஒருவேளை இறுதி வாரமான இந்த வாரத்தில் அழைக்கப்படுவார்களா என்பதும் தெரியவில்லை.

இதுவும் முதல் முறையாகவா
கொரோனா காரணமாக ஃபினாலேவும் மிக எளிமையாக, சுருக்கமாக நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்திருப்பதால் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். முந்தைய சீசன்களில் இல்லாத பல புதிய விஷயங்கள் இந்த சீசனில் நடத்தப்பட்டிருப்பதை போல், ஃபினாலேவும் வித்தியாசமாக நடத்தப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











